Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் புதியதாக 1942 பேருக்கு கொரோனா
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் நேற்று புதியதாக 1893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 79 ஆயிரத்து 130 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1930 ஆக அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பால் குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 24 ஆயிரத்து 400 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று கொரோனா வைரசால் 209 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 1,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் புதியதாக 1942 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,942 பேருக்கு கொரோனா பாதிப்பு புதியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 33 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த 1892 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 471 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன
தமிழகத்தில் கடந்த ஜூலை 23ஆம் தேதி நிலவரப்படி 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுமையாக அகற்றம். தமிழ்நாட்டில் 471 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன, சென்னையில் 85, ஈரோடு 46, நீலகிரி 43 , தஞ்சாவூர் - 41 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.




















