மேலும் அறிய
கரூர் : இன்று புதிதாக 8 நபர்களுக்கு உறுதியானது கொரோனா தொற்று
கரூரில் நேற்று 14வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று சிறப்பு முகாமில் தடுப்பூசி போடவில்லை

அரசு மருத்துவமனை
- கரூர் மாவட்டத்தில் புதிதாக 8 நபர்களுக்கு தொற்று பாதிப்பு. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 24,961 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் 11 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் 24,469 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 364 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் 128 நபர்கள் உள்ளனர்.
- கரூர் மாவட்டத்தில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி போடவில்லை. இந்நிலையில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.

- நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.
- நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 20 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 54,494 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 38 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 53,624 நபர்கள் ஆகும்.

- நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 517 நபர்கள் ஆகும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 353 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றன.
- தமிழகத்தில் இன்று 605 நபர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 663 நபர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று 9 நபர்கள். தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 6,562 நபர்கள் உள்ளனர்.
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















