சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 182 ஆக உயர்வு!
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று 32 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சுழற்சி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகள் நடத்த அட்டவணையும் வெளியிடப்பட இருக்கிறது.
இந்தநிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. அதேபோல், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாள்தோறும் 15 கீழ் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டது.
#TamilNadu | #COVID19 | 28 April 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) April 28, 2022
• TN - 73
• Total Cases - 34,53,829
• Today's Discharged - 32
• Today's Deaths - 0
• Today's Tests - 20,014
• Chennai - 44#TNCoronaUpdates #COVID19India
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று 32 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மொத்தமாக 20,014 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நேற்று தமிழ்நாட்டில் எந்தவித உயிரிழப்பும் பதிவாகவில்லை. இதையடுத்து, தற்போது சென்னை ஐஐடியில் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )