சேலம் மாவட்டத்தில் புதிதாக 83 பேருக்கு தொற்று உறுதி: 4 பேர் உயிரிழப்பு!
சேலம் மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச உயிரிழப்பு கொண்ட மாவட்டமாக சேலம் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1562 ஆக உள்ளது.
மேலும் 113 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை சேலம் மாவட்டத்தில் 90,939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,562 ஆக உயர்வு.
மாவட்டத்தில் 1,061 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 4788 பரிசோதிக்கப்பட்டதில் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச உயிரிழப்பு கொண்ட மாவட்டமாக சேலம் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று வரை 10 லட்சத்து 18 ஆயிரத்து 750 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள 138 மையங்களிலும் 17 ஆயிரத்து 580 இரண்டாம் தவணை கோவிஷில்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது . பொதுமக்கள் தங்கள் குடியிருப்பிற்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களில் அணுகி சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி குறைந்த அளவே வருவதால் ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சேலம் மாவட்டத்தில் நாளை தடுப்பூசி இருப்பு இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிப்பு:
தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை . மேலும் 26 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 355 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 235 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 25,575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,165 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 2434 பரிசோதிக்கப்பட்டதில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 31 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை . நோயிலிருந்து குணமடைந்த 40 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 315 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 322 ஆக உள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40,747 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,393 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 1948 பரிசோதிக்கப்பட்டதில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )