புனே U19 கிரிட்கெட்: 57-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு..
புனேவில் நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்ட கூச் பெஹர் டிராபி நாக் அவுட்களில் விளையாட்டு மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 57 கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோயின் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2021-22 சீசனுக்கான ரஞ்சி டிராபி, கர்னல் சி. கே நாயுடு டிராபி மற்றும் சீனியர் மகளிர் டி20 லீக் ஆகியவற்றை ஒத்திவைத்ததை அடுத்து இது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிரிடக்கெட் வாரியம் அதன் 19 வயதுக்குட்பட்ட விளளையாட்டு போட்டியை இன்னும் நிறுத்தவில்லை.
பிசிசிஐ -யின் உயர் மட்ட நிர்வாகிகள் மத்தியில் குழு விரைவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது.
"போட்டி ஏற்கனவே நடந்து கொண்டு இருப்பதால், நிறுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் விரைவில் அது குறித்து முடிவெடுக்க வேண்டும்,” என்று பிசிசிஐ அதிகாரி ஒரவர்தெரிவித்தார்.
கோவிட் பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்ட 30 வீரர்களில் ஆறு பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு மாதமாக லீக் ஆட்டங்களில் விளையாடடி, பையோ- பப்பலில் இருந்ததால் பெரும்பாலான வீரர்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை.
மும்பை, மகாராஷ்டிரா, விதர்பா, ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் பெங்கால் ஆகிய 8 அணிகள் கூச் பெஹார் டிராபி நாக் அவுட்களுக்கு தகுதி பெற்றுள்ளன. அவர்கள் புனேவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நான்கு நாள் நாக் அவுட் ஆட்டங்களில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.
மும்பை மற்றும் மகாராஷ்டிரா அணிகள் தங்களது லீக் ஆட்டங்களை புனேவில் விளையாடி ஏற்கனவே அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. நாக் அவுட்களில் ஈடுபட்டுள்ள மற்ற அணிகள் சனிக்கிழமை அந்தந்த இடங்களிலிருந்து வந்து மூன்று நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டது. ஏற்பாட்டின் படி, அடுத்த மூன்று நாட்களுக்கு வீரர்கள் அறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் தினசரி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சில்ல நாட்களுக்கு முன்பு, மூன்று உள்நாட்டு போட்டிகளை ஒத்திவைக்க வாரியம் முடிவு எடுத்தது. ஒரு செய்திக்குறிப்பில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “வீரர்கள் மற்றும் விளையாட்டில் ஈடுபடும் அனைவரின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிக முக்கியமானது” என்று கூறியிருந்தார்.
“பிசிசிஐ வீரர்கள், துணை ஊழியர்கள், போட்டி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற பங்கேற்பாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய விரும்பவில்லை, எனவே மறு அறிவிப்பு வரும் வரை மூன்று போட்டிகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பிசிசிஐ தொடர்ந்து நிலைமையை மதிப்பிட்டு, அதற்கேற்ப போட்டிகள் தொடங்குவது குறித்து அழைப்பு விடுக்கும்,” என்று ஷா கூறினார்.