பீரியர்ட்ஸ் நேரத்தில் செக்ஸ் வைத்து கொள்ளலாமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
மாதவிடாய் குறித்த பொது எண்ணம் பலவாறானதாக இருந்தாலும், மாதவிடாய் காலத்தில் பாலியல் உறவு கொள்வது குறித்த உரையாடலைப் பேசாமல் கடந்து செல்ல முடியாது.
கருப்பை கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரும் மாதவிடாய் என்னும் உடலியல் மாற்றத்தை ஒவ்வொரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் என்பது வழக்கமான மாற்றம் என்றாலும், சமூகத்தில் நிலவும் மாதவிடாய் குறித்து இருக்கும் எண்ணம் காரணமாகவும், மாதவிடாய் குறித்த உரையாடல் நிலவாமல் இருப்பதாலும், மாதவிடாய் என்பது இயல்பான மாற்றம் என்பது குறித்த புரிதலை சமூகத்தில் ஏற்படுத்துவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
மாதவிடாய் குறித்த பொது எண்ணம் பலவாறானதாக இருந்தாலும், மாதவிடாய் காலத்தில் பாலியல் உறவு கொள்வது குறித்த உரையாடலைப் பேசாமல் கடந்து செல்ல முடியாது. பாலியல் தேவை குறித்த ஆரோக்கியமான உரையாடல்களில் மாதவிடாய் நேரத்தில் பாலியல் உறவு கொள்வது குறித்தும் பேசப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் பெறும் நபர் சுமார் 2 முதல் 7 நாள்கள் வரை அதனோடு இருக்கிறார். இது ஆண்டுக்கு சுமார் 24 முதல் 84 நாள்கள் வரை, சுமார் ஒன்று முதல் இரண்டு மாதங்கள் பாலியல் உறவில் இருந்து அவரை விலக்கி வைப்பதாக அமைகிறது.
மாதவிடாய் நேரத்தில் பாலியல் உறவு கொள்வது தவறு என்று கூறப்பட்டிருந்த நிலையில், அது தற்போது பாலியல் ஆரோக்கியம் குறித்த உரையாடல்களில் இடம்பெறத் தொடங்கியுள்ளது.
மாதவிடாய் காலத்தில் அது உடலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையும், பாலியல் உறவை அது எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பது குறித்தும் பல்வேறு பாலியல் மருத்துவர்கள் மற்றும் சிறுநீரக நிபுணர்களிடம் பேசிய பிறகு அவர்கள் இதுகுறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. கருப்பையில் உள்ள கரு முட்டைகள் வளர்வதற்காக உடலில் ஈஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்டீரான் என்கிற இரண்டு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவற்றின் காரணமாக, ஒவ்வொரு மாதமும் விந்தணுக்களால் தீண்டப்படாத கரு முட்டைகள் தானாகவே வெளியேறுவதே மாதவிடாய் எனக் கருதப்படுகிறது. பெண்ணுறுப்பில் இருந்து வெளியாகும் மாதவிடாய் ரத்தத்தில் ரத்தம், பாக்டீரியா, தசை நார்கள் முதலானவை இருக்கின்றன.
மேலும், மாதவிடாய் நேரத்தில் ப்ரொஜெஸ்டீரான் என்ற ஹார்மோன் அதிகளவில் சுரப்பதால் அக்காலத்தில் பாலியல் நாட்டம் அதிகரிக்கிறது. எனினும் சமூக பொது எண்ணன் காரணமாக பலரும் மாதவிடாய் காலத்தில் பாலியல் உறவில் இருந்து விலகுவது உளவியல் காரணியாக கருதப்படுகிறது. மாதவிடாய் உடலில் உள்ள பாலியல் உறுப்புகளைப் பாதிப்பதில்லை என்பதால் அந்நேரத்தில் பாலியல் உறவு கொள்வது ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொண்டாலும் கருவுறுதல், பால்வினை நோய்கள் ஏற்படுவது முதலானவை தவிர்க்க முடியாது என்பதால் மருத்துவர்கள் ஆணுறை பயன்படுத்துவதைப் பரிந்துரைக்கின்றனர்.
மாதவிடாய் காலத்தில் பாலியல் உறவு கொண்டாலும், அதனைத் தவிர்த்தாலும் இதுகுறித்த உரையாடல் மட்டுமாவது தற்போதைய சூழலில் தேவையானதாக இருக்கிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )