செக்ஸ் வைத்துக்கொண்டால் கேன்சர் வருமா? - மருத்துவர் அட்வைஸ் என்ன?
ஆனால் சுயமைதுனம் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமானது, மனதை நிலைப்படுத்தி, சிந்தனைக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்து கவனத்தை அதிகரிக்கும் என்கிறது மருத்துவம்.
செக்ஸ் ஃலைப் என்றாலே சர்ச்சைகளும் அதில் சகஜம். ’முத்தம் கொடுத்தாலே புள்ள பொறந்துடும்’ என இன்னமும் நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு நடுவே உடலுறவு குறித்த சில தவறான புரிதல்கள் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதில் சுயமைதுனம் (Mastrubation) தவறு என்கிற மூட நம்பிக்கையும் உண்டு. ஆனால் சுயமைதுனம் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமானது, மனதை நிலைப்படுத்தி, சிந்தனைக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்து கவனத்தை அதிகரிக்கும் என்கிறது மருத்துவம்.
சுயமைதுனத்தால் உங்கள் பார்ட்னருடனான செக்ஸ் பாதிக்கப்படுமா?
இல்லை சுயமைதுனத்தால் செக்ஸ் லைஃப் பாதிக்கப்படாது என்கிறார்கள் மருத்துவர்கள். மாறாக உங்களுடைய செக்ஸ் வாழ்க்கையை சுவாரசியமாக்கும் மேலும் உங்களது பார்ட்னருக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.ஒருவர் உடலை மற்றொருவர் புரிந்துகொள்ளவும் ஒரு அழகான உடலுறவுக்கும் சுயமைதுனம் உதவியாக இருக்கும்.
சுயமைதுனம் செய்வதால் குழந்தைப் பெற்றுக்கொள்வது பாதிக்குமா?
குழந்தைப்பெற்றுக்கொள்ள விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்தான் ஆனால் அதற்கும் சுயமைதுனத்துக்கும் தொடர்பில்லை. ஒருவேளை கருதரித்தலில் உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்கும் சிக்கல் இருந்தால் அதற்கு செயற்கை கருத்தரித்தல் முதல் வாடகைத் தாய் வரை அறிவியல் ஆயிரம் வழிகளை வைத்திருக்கிறது.
செக்ஸ் வைத்துக்கொண்டால் சுயமைதுனத்தால் கேன்சர் வருமா?
இதையெல்லாம் விட செக்ஸ் வைத்துக்கொண்டாலோ அல்லது சுயமைதுனத்தாலோ கேன்சர் வரும் என்கிற தவறான புரிதலும் நிறைய பேருக்கு உண்டு. ஆனால் உண்மை என்ன தெரியுமா? உடலுறவு வைத்துக்கொள்பவர்களில் குறிப்பாக ஆண்களில் 70 வயது வரை புற்றுநோய் பாதிப்புகள் எதுவும் தென்படுவதில்லை என ஆய்வுகள் சொல்கின்றன. அதுவும் அதிகம் பாலுணர்வு தோன்றும் ஆண்களில் இறப்பு விகிதம் 50 சதவிகிதம் வரைக் குறைவாக இருப்பதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுயமைதுனமும் சுத்தமும்
சுயமைதுனம் தவறில்லை என்றாலும் அந்தத் தருணத்தில் நீங்கள் சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். உங்கள் கைகள் உங்களது பிறப்புறுக்கள் சுத்தமாக இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளவும். உங்கள் கைகளில் இருக்கும் கிருமிகள் உங்கள் பிறப்புறுக்களை பாதிக்க வாய்ப்புள்ளது.அதனால் கைகளை அடிக்கடிக் கழுவவும். நகங்கள் வெட்டப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.சுயமைதுனத்துக்குப் பிறகு சிறுநீர் கழிப்பதையும் தவிர்க்கவேண்டாம் இதன் மூலம் சிறுநீர் பாதை தொற்றுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
இன்னும் குழப்பமா?
ஒருவேளை இவை அத்தனையும் மீறி உங்களுக்கு உடலுறவு குறித்த குழப்பம் இருந்தாலோ அல்லது உடல்ரீதியாக உங்களுக்கு எதுவும் மாற்றம் தென்பட்டாலோ உடனடியாக உங்களது மருத்துவரை ஆலோசிக்கவும். இவைதவிர பால்வினை நோய்களில் இருந்து உங்களைத் தற்காத்துக்கொள்வதும் மிக மிக முக்கியம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )