ButterMilk | மழையோ குளிரோ… மோர் குடிப்பதை நிறுத்தாதீர்கள்! முக்கியமான காரணங்கள் என்ன தெரியுமா?
மோரின் நன்மைகளை பெற இப்படித்தான் பருக வேண்டும் என்ற எந்த வரையரையும் இல்லை. எப்படியாவது தினமும் மோர் நம் உடலுக்குள் சென்றுகொண்டே இருக்க வேண்டும்.
பொதுவாக வெயில் காலங்களில்தான் மோர் தேவை அதிகமாக இருக்கும். மழை காலங்களில் மோர் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் மழை காலங்களிலும் பனி காலங்களிலும்தான் மோர் குடிக்க வேண்டும். காரணம் இவை செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதுவும் மோரில் இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து குடித்தால், ருசியாகவும் நல்ல மணத்துடனும் இருக்கும். இத்தகைய மோரை அன்றாடம் ஒருமுறை குடித்தால், பல்வேறு நன்மைகள் கிடைத்து, உடல் ஃபிட்டாக இருக்கும். மோர் ஒரு பால் தயாரிப்பு, இது கிரீமில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. அதன் ஆங்கிலப் பெயர் 'பட்டர்மில்க்' என்றாலும் அதில் வெண்ணெய் கிடையாது. எனவே, அதற்காக பயப்படத் தேவையில்லை.
மோர் மிகவும் மெல்லியதாகவும் அமிலத்தன்மையுடையதாகவும் இருக்கும். பொதுவாக கருப்பு உப்பு மற்றும் சீரகம் சேர்த்து குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். பாரம்பரியமாக செய்தால், மோர் அதிக நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த நாட்களில், இது இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது, இயந்திரங்கள் அதிலிருந்து நல்ல பாக்டீரியாக்களை குறைக்கிறது. மோரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டோஸ், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மோரின் நன்மைகளை பெற இப்படித்தான் பருக வேண்டும் என்ற எந்த வரையரையும் இல்லை. எப்படியாவது தினமும் மோர் நம் உடலுக்குள் சென்றுகொண்டே இருக்க வேண்டும். அப்படி சேர்த்தால் செரிமான கோளாறு நீங்கும், உடல் எடை குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றெல்லாம் நமக்கு தெரியும். வேறென்ன நன்மைகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.
உடல் வெப்பநிலையை தணிக்கும்: வெப்பத்தால் உடல் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறது. மோர் இந்தப் பிரச்சனையைத் தடுத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
கால்சியம் சத்து:
மோரில் கால்சியம் அதிகமாக உள்ளது. இது எலும்பு, பற்களின் நலனுக்கு மிகவும் அவசியம். ஆஸ்டியோபொரோசிஸ், தசை பிடிப்பு, சோர்வு, சோம்பல் போன்றவற்றை மோர் தடுக்கும். கால்சியம் சத்து குறைபாடு உள்ளவர்கள் மோர் அருந்துவதன் மூலம் அதை பெறலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: மோரில் கால்சியம் தவிர பல்வேறு புரதங்கள், வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகின்றன. இதன் விளைவாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
ரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியம்: மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. ஆகவே மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
நீர்ச்சத்து:
மோர் என்பது தண்ணீரால் ஆனது. மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், எலெக்ட்ரோலைட்கள் உள்ளன. இதனால், கோடையில் அடிக்கடி மோர் அருந்துவது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைப்பதை உறுதி செய்யும். மேலும், எலெக்ட்ரோலைட் பற்றாக்குறையையும் சரி செய்யும்.
உடல் எடை குறைப்பு:
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில், மோரில் கொலஸ்ட்ராலை குறைவாக பராமரிக்க உதவும் பயனுள்ள மூலக்கூறுகள் உள்ளன. மேலும் ஆயுர்வேதத்தின்படி, ஒருவர் மோரை தினமும் குறைந்தது ஒரு முறை குடிப்பதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )