Breast engorgement: மார்பக வீக்கம், தவிக்கும் தாய்மார்கள்..! காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி? தீர்வுகள் இதோ..!
Breast engorgement: தாய்மார்களுக்கு ஏற்படும் மார்பக வீக்கத்திற்கான காரணம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Breast engorgement: தாய்மார்களுக்கு ஏற்படும் மார்பக வீக்கத்தின் விளைவுகள் மற்றும் சிகிச்சை முறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மார்பக வீக்கம் என்றால் என்ன?
Breast engorgement என்பது மார்பகங்களில் ஏற்படும் வலிமிகுந்த ஒரு நிலையாகும். இது தமிழில் மார்பக வீக்கம், இறுக்கம் மற்றும் மார்பகங்களின் அளவு அதிகரிப்பு என குறிப்பிடப்படுகிறது.
இது பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் ஆரம்ப நாட்களில் நிகழ்கிறது. சிலருக்கு பல மாதங்களுக்குப் பிறகும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை ஈன்றவர்களுக்கு தாமதமாகவே இந்த சிக்கல் ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மார்பக வீக்கம் ஏற்படுவது ஏன்?
தாயின் பால் உற்பத்தியானது குழந்தையின் நுகர்வை விட அதிகமாக இருக்கும் போது அல்லது குழந்தையின் உணவளிக்கும் காலநேரம் மாறும்போது இது நிகழலாம். அதாவது மார்பகப் பகுதியில் அதிகப்படியான பால் மற்றும் ரத்தம் தேங்குவதால் மார்பக வீக்கம் ஏற்படுகிறது.
மார்பக வீக்கத்தின் விளைவுகள்:
மார்பக வீக்கத்தின்போது தாய்மார்கள் வலி மற்றும் வீக்கத்தை உணர்கின்றனர். இறுக்கமாக மாறி மார்பக பகுதியை பாரமாக உணரலாம். அரிப்பு ஏற்படும். சிலர் சோர்வாகவும், காய்ச்சலையும் அனுபவிக்கலாம். மார்பக பகுதி துடித்து வலியை ஏற்படுத்தலாம். தோலின் கீழ் உள்ள நரம்புகள் வெளியே தெரியும் அளவிற்கு அந்த பகுதி மென்மையாக மாறக்கூடும்.
மார்பக வீக்கத்தை தடுப்பது & குறைப்பதற்கான வழிகள்:
- அதிக நேரம் தாய்ப்பாலூட்டுவது மார்பக வீக்கத்தை குறைக்கும்
- மற்றொரு மார்பகத்திற்கு மாறுவதற்கு முன், மிருதுவாகும் வரை முதல் மார்பகத்திலேயே குழந்தையை பால் அருந்தச் செய்யுங்கள்
- கடுமையான மார்பக அழுத்தத்தைத் தவிர்க்க, ஒவ்வொரு 1-2 மணி நேரத்திற்கும் குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுங்கள்
- மார்பகங்களில் பால் தேங்காமல் சீரான இடைவெளியில் வெளியேற்றுவது சிறந்த தடுப்பு நடவடிக்கை
- மோசமான வெளியேற்றுதல் மற்றும் மார்பகத்திற்குள் தீர்க்கப்படாத அழுத்தம் பால் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்தும் மற்றும் உங்கள் குழந்தைக்கான பாலை உற்பத்தி செய்யும் திறனைக் குறைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்
மார்பக வீக்கத்திற்கான சிகிச்சைகள்:
- உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தி, சீரான இடைவெளியில் 30 விநாடிகளுக்கு உங்கள் மார்பகத்தின் மீது மசாஜ் செய்து கொள்ளலாம்.
- மார்பகத்தை கைகளால் அழுத்தி சிறிது பாலை வெளியேற்றுவதன் மூலம் இறுக்கத்தை குறைக்கலாம்
- நன்கு பொருந்தக்கூடிய ஆதரவான பிராவை அணியுங்கள்
- ஐஸ் பேக்குகள் மார்பக வீக்கத்தைக் குறைத்து ஆறுதலளிக்கலாம்
- குழந்தைக்கு ஊட்டுவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு சிறிது பாலை வெளியேற்றுங்கள் அல்லது குழந்தைக்கு ஊட்டுவதற்கு முன் ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரின் மேல் சாய்ந்து உங்கள் பால் எளிதில் வெளியே வர வழிவகை செய்யலாம்.
- வலியைக் குறைக்க தாய்ப்பால் கொடுக்கும் முன் அசெட்டமினோஃபென் அல்லது இப்யூபுரூஃபன் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
- கழுவிய, குளிர்ந்த முட்டைக்கோஸ் இலைகளை மார்பகங்களில் 20 நிமிடங்கள் அல்லது இலைகள் வாடும் வரை தடவவும்
- தட்டையான பரப்பை கொண்ட பொருட்களை கொண்டு மார்பகத்தின் மேல்பகுதியிலிருந்து, கீழ் முனை வரை நீவி விடலாம்
பொறுப்பு துறப்பு: மேல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு செய்திகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை ஆகும். எந்தவொரு சிகிச்சை முறையை மேற்கொள்வதற்கு முன்பும் மருத்துவரை அணுகுவது சிறந்த முடிவாகும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )