குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்கிறீங்களா? உடனே நிறுத்துங்கள்.... டாக்டர் கூறுவது என்ன?
சருமம் வறட்சியாக இருப்பதை தவிர்க்க குளிர்காலத்தில் முதலில் சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்கிறீங்களா?
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக கடுமையான பனிப்பொழிவு கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களுடைய சருமத்தை குளிர் காலத்தில், எப்படி பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த பல டிப்ஸ்களையும் , அறிவுரைகளையும் சித்த மருத்துவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
குளிர்காலத்தில் முகம் வறட்சியாக காணப்படும் அதற்கு காரணம் குளிர்காலத்தில் சருமத்தில் எண்ணெய் பசை வறண்டு போய்விடும், கொழுப்பு திரவங்கள் உறைந்து காணப்படும். ஆகையால் தான் சருமம் வறட்சியாக காணப்படும்.
சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்த்தல்:
சருமம் வறட்சியாக இருப்பதை தவிர்க்க குளிர்காலத்தில் முதலில் சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். சுடுதண்ணீரில் குளிப்பதால் சருமத்தில் உள்ள தோல்கள் விரிவடையும், அப்படியே நீங்கள் வெளியில் வரும்போது சருமத்தோல் சுருங்க ஆரம்பிக்கும், எனவே 98.4% சதவீதம் டெம்பரேச்சர் உள்ள சாதாரண போர் தண்ணீரிலே குளிக்கலாம்
பாலாடை :
சருமம் வறட்சியாக காணப்படாமல் இருப்பதற்கு குளிப்பதற்கு முன்னாடி பாலாடையை கை, கால் தடவி 1 மணி நேரம் கழித்து, பாசிப்பருப்பு மாறு மற்றும் கடலை மாவு சேர்த்து தடவி குளித்து வந்தால் சருமம் வறட்சி மாறி, மென்மையாக காணப்படும்.
இதில் குறிப்பாக, முகத்திற்கு மட்டும் கற்றாழை அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி, முகத்தில் தேய்த்த பிறகு பாசிப் பருப்பு அல்லது கடலைப்பருப்பு சேர்த்து முகத்தை கழுவினால் முகம் மென்மையான (Moisture) சருமத்தை பெறும் வசதி உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம்.
முக்கியமாக குளிர் காலத்தில் அதிகமாக பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை உதட்டு வெடிப்பு. இதனை சரி செய்வதற்கு வீட்டிலேயே எளிமையாக கிடைக்கும் பசு வெண்ணெய் அல்லது பசு நெய்யை காலை மற்றும் இரவு நேரத்தில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு, உதட்டில் தோல் உரிதல் சரியாகும்.
குளிர்காலத்தில் உதட்டு வெடிப்பு மட்டுமல்லாமல் பாதம் வெடிப்பும் ஏற்படும். இதற்கு இயற்கையான முறையில் கிளிஞ்சல் மெழுகு பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். அனைத்து வகையான கிளிஞ்சல் பொடி மற்றும் வெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டிய பிறகு ஒரு திரவமாக இருக்கும் அந்த பேஸ்ட்டை பாத வெடிப்பில் தடவி வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் பாத வெடிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
குளிர்காலத்தில் பொதுமக்கள் வால்நட், பாதாம், பிளாக் சீட் (flaxseeds )விதை, பப்பாளி பழம், கேரட், மீன் வகைகளில் (சங்கரா மீன், நெத்திலி மீன் ) ஆகியவற்றை சாப்பிட்டால் சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் இயற்கையாகவே உடலுக்கு கிடைக்கும்.
இதேபோன்று இயற்கையாகவே கிடைக்கும், அதிகம் பயன்படுத்தக்கூடிய தேங்காய் பாலை சருமத்தில் தடவி குளித்தால் சருமம் மென்மையாக இருக்கும்.. தேங்காய்ப்பால் வாரத்தில் இரண்டு நாள் 30 ml அளவில் உட்கொண்டால் தோல் வறட்சி நீங்கும்
மேலும் குளிர்காலத்தில் சருமத்தில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு கலவையை சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிக்கலாம் என சித்த மருத்துவர் சண்முகம் தெரிவித்தார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )