Health Tips: மார்பகங்களில் ஏற்படும் கட்டிகள் அனைத்துமே புற்றுநோயா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
பெண்களில் புற்றுநோய்களால் ஏற்படும் இறப்புகளில், 15 சதவிகித இறப்பு மார்பகப் புற்றுநோயால் ஏற்படுகிறது. ஆகவே, நமது கவனத்தை திருப்புவது அவசியம் ஆகிறது.
உங்கள் மார்பகங்களில் உருவாகும் கட்டிகள் எப்போதுமே புற்றுநோயாக மட்டுமே இருக்கின்றதா? மார்பகங்களில் ஏற்படும் மற்ற கட்டிகள் என்னென்ன? எப்போது சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்? மருத்துவர்கள் கூறுவதைப் பார்க்கலாம்.
பெண்களில் புற்றுநோய்களால் ஏற்படும் இறப்புகளில், 15 சதவிகித இறப்பு மார்பகப் புற்றுநோயால் ஏற்படுகிறது. ஆகவே, நமது கவனத்தை திருப்புவது அவசியம் ஆகிறது.
மாதவிடாய் சுற்றுகளின் போது மார்பகத்தின் உள்ளும் மாற்றங்கள் நடக்கும். மேலும், வயதாவதும் மார்பகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். மார்பகத்தில் ஏற்படும் எல்லா கட்டிகளும் புற்றுநோயைக் குறிப்பதல்ல. ஆயினும், உங்களது மார்பகங்களில் கட்டிகளைப் பார்த்தால், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். வடிவத்திலோ, அளவிலோ திடீரென்று மாறுதல் ஏற்பட்டால், நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். மாதவிடாய் காலங்கள் அல்லாமல் மார்பகத்தில் வலி தொடர்ச்சியாக இருந்தால், தோலில் அரிப்பு, சிவப்பாவது போன்ற தொந்தரவுகள் இருப்பின், மருத்துவரை சந்திக்க வேண்டும்.
மார்பகத்தில் ஏற்பட்டிருக்கும் கட்டிகள் புற்றுநோயா என்பதை சோதிக்க வரிசையாக சில சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் இரண்டு சோதனையில், மாற்றங்கள் உறுதிபட்டால், மாமோகிராம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது, இந்த சோதனையில், புற்றுநோய் உறுதியானால், உங்கள் மருத்துவர் சிகிச்சை வழிமுறைகளை உடனடியாக விவரிப்பார். அறுவை சிகிச்சையின் பின், மேற்கொள்ள கீமோ மற்றும் கதிரியக்க சிகிச்சைகள் தேவைப்படலாம். மாமோகிராம் சோதனையில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படா விட்டாலும், மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. உங்களது மார்பகத்தில் ஏற்பட்ட கட்டிகளுக்கான பிற காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை வழங்குவது வரை கண்காணிப்பு அவசியம்.
2018-இல் 6,27,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறந்துள்ளனர். ஆகையினால், இந்த அறிகுறிகளைக் கவனமுடன் பார்க்க வேண்டும். உங்கள் மார்பகத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், மருத்துவ ஆலோசனையை உடனடியாகப் பெறுங்கள்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )