Apollo: தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: 9 மேம்பட்ட ஆய்வகங்கள் - சிகிச்சையும், நம்பிக்கையும்
Apollo Stroke Network: சென்னை அப்போலோ மருத்துவமனை தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி மையமாக உருவெடுத்துள்ளது.

Apollo Stroke Network: மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை அப்போலோ மருத்துவமனை விரிவுபடுத்துகிறது.
சிகிச்சையை விரிவுபடுத்தும் அப்போலோ
சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனைகள் [Apollo Hospitals, Chennai], பக்கவாதத்திற்கு அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் தனது 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’ (Apollo Advanced Stroke Network)-ஐ விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. சென்னை முழுவதும் உள்ள பக்கவாத மருத்துவ பயனாளர்களுக்கு நோயின் பாதிப்பு குறித்து விரைவாக கண்டறியும் நவீன வசதி மற்றும் உரிய சிகிச்சையை உறுதிபடுத்தும் வகையில், மருத்துவ நெறிமுறை அடிப்படையிலான அனைத்து வசதிகளையுக் கொண்ட அமைப்பாக 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இளைய தலைமுறையினரிடையே பக்கவாத பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பக்கவாத பராமரிப்பில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிறப்பான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதில் இந்த முன்முயற்சி பெரும் பங்கு வகிக்கும்.
”நேரம் தான் மூளை”
பக்கவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்த முன்முயற்சி மிகப்பெரும் முன்னெடுப்பாகும். பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட அடுத்த ஒவ்வொரு நிமிடமும் மிக மிக முக்கியமானவை. இதனால்தான் பக்கவாத சிகிச்சையில், "நேரம் தான் மூளை" (Time is Brain) என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் பக்கவாத தாக்கத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் சுமார் 1,90,000 மூளை செல்கள் அழிக்கப்படுகின்றன. இந்த புதிய பக்கவாத சிகிச்சை நெட்வொர்க், சென்னையில் உள்ள அப்போலோவின் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள மருத்துவ பயனாளர்களுக்கு, ரத்தக்குழாய் அடைப்பு (ischemic) மற்றும் ரத்தப்போக்கு (hemorrhagic) பக்கவாதங்கள் இரண்டிற்கும் ஒரே மாதிரியான, உயர்தரமான மற்றும் நேரத்திற்கு உகந்த பராமரிப்பைப் பெறுவதை உறுதி செய்கிறது.
ஆண்டிற்கு 1.3 கோடி பேர் பாதிப்பு:
ஒருங்கிணைந்த பக்கவாத சிகிச்சை நடைமுறைகள் மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகளுக்கு அடித்தளம் அமைத்த, 2023-ல் அப்போலோ மருத்துவமனைகள் தொடங்கிய பக்கவாத சிகிச்சைக்கான நெட்வொர்க்கின் தொடர்ச்சியே இந்த விரிவாக்கமாகும். சென்னை முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டிருப்பதன் முக்கிய நோக்கம், ஏராளமான மக்களைச் சென்றடைவது, ஆரம்பகாலத்திலேயே நோய் கண்டறியும் வாய்ப்புகளை வலுப்படுத்துவது, மற்றும் உயிரிழப்பு விகிதத்தைக் குறைத்து, குணமடையும் வாய்ப்புகளை மேம்படுத்துவது போன்றவையாகும்.
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.3 கோடி பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். சென்னையில் மட்டும், ஆண்டுக்கு சுமார் 10,000 பேர் பக்கவாதத்தினால் பாதிகப்படுவதாக தெரிய வந்திருக்கிறது. இது பக்கவாத தொடர்பான விழிப்புணர்வு, அதன் பாதிப்பு ஏற்படும் சூழலில் அதற்கான சிகிச்சைகளை தயார்நிலையில் வைத்திருக்கும் வசதி மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளை நாடுவதின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
அனுபவம் வாய்ந்த மருத்துவர் குழு
'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’, சென்னையின் நரம்பியல் மற்றும் நியூரோவாஸ்குலர் (Neurovascular) சிகிச்சையில் முன்னணி வகிக்கும் மருத்துவ நிபுணர்களை ஒன்றிணைக்கிறது. இந்த பல்துறை மருத்துவக் குழுவில் டாக்டர். சீனிவாசன் பரமசிவம் (மூத்த ஆலோசகர் – நியுரோ எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சை) [Dr. Srinivasan Paramasivam, Senior Consultant – Neuro Endovascular Surgery], டாக்டர். கண்ணன், டாக்டர். விஜய சங்கர், டாக்டர். முத்துகனி, டாக்டர். அருள்செல்வன், டாக்டர். சதீஷ் குமார், டாக்டர். ஸ்ரீனிவாஸ் யு.எம் மற்றும் அனைத்து மூத்த நரம்பியல் ஆலோசகர்களும் அடங்குவர். இந்த மருத்துவர் குழு, பக்கவாத சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஆழ்ந்த அனுபவமும், சிறப்பு நிபுணத்துவமும் கொண்டது. இதன் மூலம் சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனைகள் நெட்வொர்க்கில் உள்ள நோயாளிகளுக்கு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை உறுதி செய்யப்படுகிறது.
ஸ்ட்ரோக்கிற்கான சிகிச்சை முறைகள்
அப்போலோ மருத்துவமனைகள், கிரீம்ஸ் லேன், சென்னையின் நியூரோ என்டோவாஸ்குலர் சர்ஜரி பிரிவின் தலைவர், டாக்டர் ஸ்ரீனிவாசன் பரமசிவம் [Dr. Srinivasan Paramasivam, Head of Neuro Endovascular Surgery at Apollo Hospitals, Greams Lane, Chennai] கூறுகையில், "பக்கவாதத்திற்கு நவீன சிகிச்சைகளை அளிக்கும் 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’, பக்கவாத நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சையை விரைவுப்படுத்தும், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நேரத்தை வீணடிக்காமல் தகுந்த சிகிச்சைகளை உடனடியாக அளிக்கும் ஒரு நிபுணத்துவ அமைப்பைக் குறிக்கிறது. இஸ்கிமிக் பக்கவாதத்திற்கு [ischemic stroke] மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி (Mechanical Thrombectomy) போன்ற நியூரோ என்டோவாஸ்குலர் சிகிச்சைகள் மற்றும் ஹெமோரேஜிக் பக்கவாதத்திற்கான [hemorrhagic stroke] என்டோவாஸ்குலர் மற்றும் மைக்ரோ சர்ஜிக்கல் சிகிச்சைகளை அளிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்., நேரத்தை தாமதப்படுத்தாமல், விரைவான, அறிவார்ந்த சிகிச்சைகளின் மூலம் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற வேண்டும், சிகிச்சை முடிவுகளை மேம்படுத்தவேண்டும் என்பதே எங்களது இலக்கு’’ என்றார்.
பக்கவாதத்திற்கான அறிகுறிகள்
ஓ.எம்.ஆர் அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர். சதீஷ் குமார் [Dr. Satish Kumar, Senior Consultant, Apollo Speciality Hospitals, OMR] கூறுகையில், "இன்று வளர்ச்சிக்கண்டு வரும் புதிய பக்கவாத சிகிச்சைகள் நேரத்தைச் சார்ந்தவை. எவ்வளவு விரைவாக சிகிச்சையை அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக காலம் தாழ்த்தாமல் சிகிச்சையளிக்க வேண்டும். பக்கவாத பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டவர்களின் நரம்புக்குள் ரத்த உறைவைக் கரைக்கும் த்ரோம்போலைசிஸ் சிகிச்சையை (intravenous thrombolysis) தொடங்க நமக்கு தற்போது 4.5 மணிநேரமே அங்கீகரிக்கப்பட்ட காலக்கெடுவாக உள்ளது. திடீரென நரம்பியல் கோளாறு ஏதேனும் தோன்றினால், அதை பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறியாகக் கருதப்பட வேண்டும். திடீர் பார்வை இழப்பு, முகம் கோணலாகும் தோற்றம், உடலின் ஒரு பக்கத்தில் கை/காலில் திடீர் பலவீனம் அல்லது உணர்வின்மை, சரளமாக பேசுவதில் வழக்கத்திற்கு மாறான தடங்கல்கள் மற்றும் உடல் இயக்கத்தில் சமநிலை இழப்பு ஆகியவை இந்த நோயைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய அறிகுறிகளாகும். பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வும், பக்கவாத நோய் மேலாண்மையில் நேரத்தின் முக்கியத்துவமும், தடுப்பு முறைகளும் நமது சமூகத்தில் மிகவும் குறைவாகவே உள்ளன. பக்கவாத சிகிச்சையில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது'. இந்த முக்கியமான அபாயம் குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தவர்களுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார்.
சிகிச்சையில் AI பங்களிப்பு
வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாஸ் யு.எம், [Dr. Sreenivas UM, Consultant Neurologist, Apollo Speciality Hospitals, Vanagaram] தீவிர பக்கவாத சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவின் (AI) முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில், "செயற்கை நுண்ணறிவு (AI) தீவிர பக்கவாத சிகிச்சையை நாம் அணுகும் விதத்தை ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் மாற்றியமைத்து வருகிறது. பக்கவாத மேலாண்மையில் நேரம் மிக முக்கியமான காரணியாக இருப்பதால், செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் இமேஜிங் மற்றும் துல்லியமான முடிவெடுக்க உதவும் ஆதரவுக் கருவிகள் [decision-support tools] பக்கவாத பாதிப்பை விரைவாக அடையாளம் காணவும், முன்னெப்போதும் இல்லாத துல்லியத்துடன் சிகிச்சையைத் தொடங்கவும் நமக்கு உதவுகின்றன," என்றார்.
பக்கவாதத்திற்கு எதிராக கைகோர்ப்பு
அப்போலோ மருத்துவமனைகளின் சென்னை மண்டல தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். இளங்குமரன் கலியமூர்த்தி [Dr. Ilankumaran Kaliamoorthy, Chief Executive Officer – Chennai Region, Apollo Hospitals] பேசுகையில், "குறிப்பிட்ட நரம்பியல் பிரச்சினைகள் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அப்போலோ மருத்துவமனைகள் இந்த மேம்பட்ட பக்கவாத சிகிச்சை நெட்வொர்க்கை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்பதை நாங்கள் அப்போலோவில் நன்கு அறிவோம். அந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே எங்களது பக்கவாத சிகிச்சையின் முன்மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தவர்களின் வாழ்க்கைப் பயணங்கள், அவர்களைச் சுற்றி இருப்பவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களையும் பக்கவாதத்திற்கு எதிராக கைக்கோர்க்க செய்யும். இது பெரும் பலன்களை அளிக்கும் வகையில் பக்கவாத சிகிச்சை மாதிரிகளை உருவாக்கத் தூண்டும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.
இந்த முன்னெடுப்பின் மூலம், அப்போலோ மருத்துவமனைகள், சென்னை, மேம்பட்ட நரம்பியல் மற்றும் அவசர சிகிச்சையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. இது அவசரகால சிகிச்சை முதல் மறுவாழ்வு மற்றும் சமூகக் கல்வி வரை பக்கவாத மேலாண்மையில் தொடர்ச்சியான சேவைகளை வழங்குகிறது. பொது விழிப்புணர்வு, ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியும் சோதனைகள் ஆகியவற்றை 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’ உறுதி செய்கிறது. கால தாமதம் காரணமாகவோ அல்லது சிகிச்சைக்கான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாலோ யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதை உறுதி செய்வதில் அப்போலோ மருத்துவமனை ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது.
அப்போலோ மருத்துவமனை பற்றி:
1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் [Apollo Hospitals Enterprise Ltd. (Apollo)] தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,400-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264--க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் 2,182-க்கும் அதிகமான டயக்னோஸ்டிக் மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது.
3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2,00,000—க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும் வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.
For more Information please contact:
APOLLO HOSPITALS I Suganthy 9841714433
ADFACTORS PR| Timorthy J 9962629240 | Sarath Kumar 9551785252
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















