மேலும் அறிய

தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....

நெற்றியில் ‘பேட்ச்’ ஒட்டினால் ஆழ்ந்த தூக்கம் வரும்: அமெரிக்க விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!

உலகளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வரும் தூக்கமின்மை (Insomnia) பிரச்சினைக்குப் புதிய மாற்றாக, மாத்திரைகள் ஏதுமின்றி ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் புதுமையான தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

நெற்றியில் ‘பேட்ச்’ ஒட்டினால் ஆழ்ந்த தூக்கம் வரும்: அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தூக்கமின்மைப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். தூக்கம் வராதவர்கள் அதற்காக மாத்திரைகளை உட்கொள்வது உடலுக்குப் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், மாத்திரைகளே இல்லாமல் நெற்றியில் ஒரு சிறிய ‘பேட்ச்’ ஒட்டுவதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம் என்ற அதிநவீனத் தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

‘நியூ ஸ்லீப்’ சாதனம்

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ‘நியூ ஸ்லீப்’ (NeuSleep) என்ற மென்மையான சாதனத்தை (பேட்ச்) உருவாக்கியுள்ளனர்.

இரவில் தூங்கச் செல்லும்போது இந்த பேட்சை நெற்றியில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அதில் இருந்து வெளிப்படும் மிக மென்மையான அல்ட்ராசவுண்ட் (Ultrasound) அலைகள், மூளையைத் தூண்டி விரைவாக ஆழ்ந்த தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.

‘ரெம்’ தூக்கம் என்றால் என்ன?

நாம் தூங்கும்போது மூளை பல கட்டங்களைக் கடக்கிறது. அதில் ‘ரெம் தூக்கம்’ (REM Sleep) என்பது மிகவும் முக்கியமான கட்டமாகும். இந்த நிலையின் போதுதான் மனிதர்களுக்குக் கனவுகள் அதிகம் வருகின்றன. மூளை தனது நினைவுகளை முறைப்படுத்தவும், மன அழுத்தத்தில் இருந்து மீளவும் இந்த தூக்கம் மிகவும் அவசியமானது.

‘ரெம்’ தூக்கம் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் மறதி, கடுமையான சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

43 நிமிடங்கள் முன்னதாக தூக்கம்!

இந்த புதிய பேட்ச் சாதனம் குறித்து 28 பேரிடம் முதல்கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இதில், நெற்றியில் பேட்ச் ஒட்டியவர்கள் வழக்கத்தை விட சராசரியாக 43 நிமிடங்கள் முன்னதாகவே ஆழ்ந்த ‘ரெம்’ தூக்க நிலையை அடைந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் ‘ரெம்’ தூக்கத்தில் இருக்கும் நேரம் சராசரியாக 16 நிமிடங்கள் அதிகரித்துள்ளது.

மருத்துவர் கருத்து

இதுகுறித்து மனநல மருத்துவர் புவனேஸ்வரன் கூறுகையில், “தேர்வு பயம், பணிச்சுமை, இரவு ஷிப்ட் வேலை காரணங்களால் தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு இது சிறந்த துணைச் சிகிச்சையாக அமையும். தூக்க மாத்திரைகளின் அளவைக் குறைக்க இது உதவும். ஆனால், நீண்டகால அடிப்படையில் மாத்திரைகளை முழுமையாகத் தவிர்க்க முடியுமா என்பதை அடுத்த கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே உறுதியாகக் கூற முடியும்” என்றார்.

தூக்கமின்மைக்கு புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், அன்றாட வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைச் செய்து இயற்கையாக தூங்குவதே உடலுக்கு மிகவும் நல்லது என்றும் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Advertisement

தலைப்பு செய்திகள்

எந்த ஆல்கஹால் கல்லீரலைப் பாதிக்காது, போதையின் சரியான அளவு என்ன? - நிபுணர்கள் கூறும் உண்மை!
எந்த ஆல்கஹால் கல்லீரலைப் பாதிக்காது, போதையின் சரியான அளவு என்ன? - நிபுணர்கள் கூறும் உண்மை!
குழந்தைகளையும் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு.. குறைக்க முயற்சிக்க எளிய வழிகள்!
குழந்தைகளையும் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு.. குறைக்க முயற்சிக்க எளிய வழிகள்!
Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்:
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்: "பணம் கேட்டனர்; இளைஞர் உயிரிழந்தார்!" - உறவினர்கள் கதறல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget