CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
DMK and AIADMK boycotted : முதலமைச்சர் விஜய் தலைமையிலான திமுக எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளது. அந்த வகையில் மொத்தமுள்ள மக்களவை மற்றும் மாநிலங்களை எம்பிக்களில் 37 பேர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். 20 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொகுதி மறுவரை- எம்பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு
தமிழகத்தில் தவெக தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு சிக்கலாக அமைந்தது காவிரி நீர் பிரச்சனை, கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பும் நிலையில் இருந்த போதும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்தது. மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டவும் கர்நாடக அரசு திட்டமிட்டது. ஆனால் இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பிரதான எதிர்கட்சியாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் இதனை தவெக அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது.
காவிரி பிரச்சனை - அனைத்து கட்சி கூட்டம்
அதே நேரம் கர்நாடகாவிற்கு சென்று காவிரி நீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்ட நிலையில், அங்கு சூழ்நிலை சரியில்லை கர்நாடகம் வரவேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் சிவக்குமார் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தொகுதி மறுவரை தொடர்பாக ஆலோசிக்க தமிழகத்தில் உள்ள எம்பிக்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்தார். அந்த வகையில் இன்று மாலை 3 மணிக்கு கலைவாணர் அரங்கில் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லையென திமுக அறிவித்துள்ளது .
தொகுதி மறுவரை கூட்டம்- புறக்கணிக்கும் 37 எம்பிக்கள்
அரசியலுக்காக இந்த கூட்டத்தை தவெக நடத்த இருப்பதாகவும், தற்போது தொகுதி மறுவரை தொடர்பாக எந்த முடிவும் மத்திய அரசு எடுக்காத நிலையில் இந்த கூட்டம் ஏன் எனவும் கேள்வி எழுப்பியது. எனவே இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்காது என கனிமொழி தெரிவித்துள்ளார். இதே போல அதிமுகவும் கலந்து கொள்ளாது என தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி கட்சியான தேமுதிகவும் முதலமைச்சர் விஐய் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யமும் கூட்டத்தை புறக்கணித்துள்ளது. மேலும் பாமகவும் கூட்டத்தில் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.
யாரெல்லாம் கலந்து கொள்வார்கள்
அதே நேரம் தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும 3 ராஜ்யசபா உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தையின் 2 மக்களவை உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலா 2 மக்களவை உறுப்பினர்கள், மதிமுகவின் ஒரு மக்களவை எம்பி, முஸ்லிம் லீக் கட்சியின் ஒரு எம்பி மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 37 எம்பிக்கள் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில், 20 எம்பிக்கள் மட்டும் கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















