மேலும் அறிய

Health Tips: தினமும் ORS பவுடர் எடுப்பது உடலுக்கு நல்லதா? - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

அதிகப்படியான ORS பவுடரை நீர் கரைசல் அல்லது ஜூஸில் கலந்து உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை நாம் கண்டிப்பாக அறிய வேண்டும்.  தினமும் உட்கொள்வதன் மூலம் பல பிரச்னைகளை உடல் சந்திக்கிறது.

நீரிழப்பு தொடர்பான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ORS பவுடரை தினசரி எடுத்துக் கொள்ளலாமா என்பது பற்றி நாம் காணலாம். 

ORS பவுடரின் மகிமை

வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல்நலக்குறைவு அல்லது வெப்ப வெளிப்பாடு காரணமாக நாம் நீரிழப்பு பிரச்னையை சந்திக்கிறோம். இதனால் உடல்சோர்வு, மயக்கம், பலமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. நீரிழப்பு தொடர்ச்சியாக உடலில் பல பிரச்னைகளும் ஏற்படும். இப்படியான நீரிழப்பை சரிசெய்ய வாய்வழி நீரேற்ற உப்புகள் பயன்பாட்டில் உள்ளது. இதற்காக உலக சுகாதார அமைப்பு ORS பவுடரை உருவாக்கியுள்ளது. 

இதனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடலுக்குத் தேவையான இழந்த தாதுக்கள் மற்றும் உப்புச் சத்தை மீண்டும் நாம் பெற முடியும். ஆனால் சமீபகாலமாக இந்த ORS பவுடர் அல்லது ORS ஜூஸை தினசரி பலரும் எடுத்து வருகின்றனர். இப்படி தினசரி எடுத்துக் கொள்வது உண்மையில் அவசியமானதா அல்லது பாதுகாப்பானதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். 

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு  டாக்டர் ஸ்மிருதி ஜுன்ஜுன்வாலா மற்றும் டாக்டர் அதுல் இங்காலே ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

வெறும் தண்ணீரைக் குடிப்பது தீர்வாகாது

அதில்,  நீர், சோடியம், பொட்டாசியம், குளோரைடு மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றைக் கொண்டு ஓஆர்எஸ் பவுடர் உருவாக்கப்பட்டுள்ளது.  வியர்வை, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி காரணமாக உடல் இழக்கும் திரவங்களையும் எலக்ட்ரோலைட்டுகளையும் ஈடுசெய்ய இது உருவாக்கப்பட்டுள்ளது. 

உடல் உபாதை ஏற்படும் சமயங்களில் பெரும்பாலான நேரங்களில், வெறும் தண்ணீரைக் குடிப்பது முழுமையான நீரேற்றமாக அமையாது. இதனால் ஓஆர்எஸ் ஜூஸ் குடிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. இருந்தாலும்  ORS தினசரி உட்கொள்வதற்காக வடிவமைக்கப்படவில்லை.

அதிகப்படியான ORS பவுடரை நீர் கரைசல் அல்லது ஜூஸில் கலந்து உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை நாம் கண்டிப்பாக அறிய வேண்டும்.  தினமும் உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலில் திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம், இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கலாம், அல்லது உயர் இரத்த அழுத்தத்தைக்கூட உண்டாக்கலாம். ஒரே நேரத்தில் அதிகப்படியான ORS எடுத்துக்கொள்ளப்படும்போது, ​​அதன் பக்க விளைவுகள் மிகவும் அதிகமாகி, எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கு வழிவகுக்கிறது. 

யாரெல்லாம் இதை எடுக்கக்கூடாது?

சிறுநீரக நோய் உள்ளவர்கள், உயர் ரத்தம் அழுத்தம் கொண்டவர்கள், இதய நோயாளிகள். சோடியம் இல்லாத உணவு முறை பின்பற்றுபவர்கள் அதிக்கப்படியான ஓஆர்எஸ் கரைசலை எடுக்கக்கூடாது. இதில் மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகப்படியான வியர்வை, தலைச்சுற்றல், வாய் வறட்சி மற்றும் சிறுநீர் கழித்தல் குறைதல் ஆகியவை இருப்பவர்கள் அளவுடன் இதனை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Advertisement

தலைப்பு செய்திகள்

Health Tips: உங்களுக்கு ஒரு காது கேட்காது என்பதை கண்டறிவது எப்படி? - சிம்பிள் டிப்ஸ் இதோ!
Health Tips: உங்களுக்கு ஒரு காது கேட்காது என்பதை கண்டறிவது எப்படி? - சிம்பிள் டிப்ஸ் இதோ!
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்; அசால்ட்டா இருக்காதீங்க என சுகாதாரத் துறை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்; அசால்ட்டா இருக்காதீங்க என சுகாதாரத் துறை எச்சரிக்கை
தைராய்டு பாதிப்பு இருக்குன்னு சந்தேகமா? - வீட்டிலேயே செக் பண்ணுவது எப்படி?.. டிப்ஸ் இதோ!
தைராய்டு பாதிப்பு இருக்குன்னு சந்தேகமா? - வீட்டிலேயே செக் பண்ணுவது எப்படி?.. டிப்ஸ் இதோ!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget