மேலும் அறிய
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
முறைகேடாக பத்திரப்பதிவுக்கு உதவியதாக திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தென்மலை கிராமத்தை சேர்ந்த காளிகுமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்
Source : whatsapp
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு சேவை செய்வதற்கான 60 கோடி மதிப்பிலான அறக்கட்டளை சொத்து பத்திரப்பதிவு விவகாரம் - பத்திரப்பதிவுக்கு உதவிய திண்டுக்கல் சிறுமலை பகுதியை சேர்ந்த காளிகுமார் என்பவர் கைது.
மதுரையின் அடையாளமாக மாறிய மீனாட்சியம்மன் கோயில்
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு சேவை செய்வதற்கான 60 கோடி மதிப்பிலான அறக்கட்டளை சொத்து பத்திரப்பதிவு விவகாரம் - பத்திரப்பதிவுக்கு உதவிய திண்டுக்கல் சிறுமலை பகுதியை சேர்ந்த காளிகுமார் என்பவர் கைது.
காளிகுமார் என்பவரை கைது செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர்.
மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோயிலுக்கு சேவை செய்வதற்காக கடந்த 1930 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் கடந்த 2021 ஆம் தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ய்யப்பட்ட வழக்கில் கறம்பக்குடியை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, துணை ஆட்சியர் அன்பழகன் ஆகிய 3 பேரை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் கைது செய்த நிலையில் 4 ஆவது நபராக பத்திரப்பதிவுக்கு உதவியதாக திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தென்மலை கிராமத்தை சேர்ந்த காளிகுமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















