மேலும் அறிய

Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் கார்த்திக் எப்படியாவது விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்ற பதற்றத்துடன் வேகமாக சென்றுகொண்டிருந்தார். அந்த பரபரப்பு இன்று இன்னும் அதிகரிக்கிறது. கார்த்திக்கின் பயணத்தை தடுக்க எதிரிகள் தீட்டும் திட்டங்களும், ரேவதியை அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவமும் கதையை விறுவிறுப்பாக்குகின்றன.

கடுப்பாகிய சாமுண்டீஸ்வரி:

இன்றைய எபிசோடில், ரேவதி ஏர்போர்ட்டுக்குள் செல்லும்போது எதிரே வந்த ஒருவரின் ட்ராலி மீது எதிர்பாராத விதமாக மோதுகிறார். இதனால் அவரது காலில் காயம் ஏற்பட, அங்கிருந்தவர்கள் உடனடியாக முதலுதவி அளிக்கின்றனர். அப்போது சிலர், பயணத்திற்கு கிளம்பும் நேரத்தில் இப்படி நடப்பது அபசகுனம் என்று பேச, அதை கேட்டு கோபமடைந்த சாமுண்டீஸ்வரி, "உங்க வேலையை மட்டும் பாருங்க!" என்று கடுமையாக பதிலடி கொடுக்கிறார்.

அதிர்ச்சியில் சாமுண்டீஸ்வரி:

மறுபக்கம், கார்த்திக் ஏர்போர்ட்டை அடைவதை எப்படியாவது தாமதப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்த சந்திரகலா, சிவனாண்டி மற்றும் முத்துவேலுக்கு ரகசிய தகவல் தெரிவிக்கிறார். இதையடுத்து அவர்கள் பல்வேறு தடைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அனைத்தையும் தாண்டி கார்த்திக் ஏர்போர்ட்டை நோக்கி முன்னேறிக் கொண்டே இருப்பது எதிரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதற்கிடையில், விமானம் புறப்பட உள்ளதாக அறிவிப்பு ஒலிக்க, ரேவதி உள்ளே செல்ல தயாராகிறார். ஆனால் அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது பாஸ்போர்ட் கைவசம் இல்லை என்பது தெரியவர, பதற்றத்தில் பாஸ்போர்ட் மாயமாகிவிட்டதாக கூறுகிறார். இதைக் கேட்டு சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.

பாஸ்போர்ட் யார் கையில் சிக்கும்?

அந்த நொடியில் சந்திரகலாவுக்கு ஒரு முக்கியமான விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. ரேவதியின் பர்ஸை எடுத்தபோது பாஸ்போர்ட் கீழே விழுந்ததை நினைவுபடுத்திக் கொண்ட அவர், அதை தேடி எடுத்து வருவதாக கூறி அவசரமாக காரை நோக்கி ஓடுகிறார்.

கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்குமா? கார்த்திக் சரியான நேரத்தில் ஏர்போர்ட்டை அடைவாரா? அல்லது அவருக்கு எதிராக நடக்கும் சதி வெற்றி பெறுமா? என்ற பல பரபரப்பான கேள்விகளுடன் இன்றைய எபிசோட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்த விறுவிறுப்பான திருப்பங்களுக்கு விடை காண, கார்த்திகை தீபம் சீரியலை இன்று இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்! 

Advertisement

தலைப்பு செய்திகள்

Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
Embed widget