மேலும் அறிய

CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 9 அமைச்சர்களின் செயல்பாடுகள் மட்டுமே திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக உளவுத்துறை அளித்த அறிக்கையால் அதிருப்தி அடைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் தவெக அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கும் அனைவரும் முற்றிலும் புதியவர்கள்.

அமைச்சர்கள் செயல்பாடுகள்:

ஊழலற்ற ஆட்சி என்பதையே முதன்மைக் கோட்பாடாக கொண்டு முதலமைச்சர் விஜய் தனது ஆட்சி இருக்க வேண்டும் என்று விரும்பி வருகிறார். அமைச்சர்கள் அனைவரிடமும் இதை கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் சிலர் மீதான செயல்பாடுகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அப்செட்டில் முதலமைச்சர்:

இந்த சூழலில், உளவுத்துறை மூலமாக அமைச்சர்கள், அவர்கள் உதவியாளர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பற்றி முதலமைச்சர் அறிக்கை ஒன்றைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் தற்போது இடம்பிடித்துள்ள 33 அமைச்சர்களில் 9 பேரின் செயல்பாடுகள் மட்டுமே அமைச்சருக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவே அதில் கூறப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது,

உளவுத்துறையைப் பார்த்த முதலமைச்சர் விஜய் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தவெக எம்எல்ஏ-க்கள் சிலர் முன்பணம் பெற்றதாக தகவல் கசிந்த விவகாரத்திலே முதலமைச்சர் விஜய் மிக கடுமையான அதிருப்தியில் இருக்கும் நிலையில், இந்த தகவல் மேலும் அவரை அதிருப்தியாக்கியுள்ளது.

அமைச்சரவை மாற்றத்திற்கு ரெடி:

கூட்டணி கட்சியினர் அவ்வப்போது குடைச்சல் தரும் வேளையில், அமைச்சர்களும் இதுபோன்று குடைச்சல் தந்து வருவது அவருக்கு கவலை அளித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.

தங்கள் மீது முதலமைச்சர் அதிருப்தியில் இருப்பதை உணர்ந்த அமைச்சர்கள் சிலர் விஜய்யிடம் நற்பெயர் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், விஜய் அமைச்சரவையில் புதியதாக யாரை இணைக்கலாம்? அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இதுவரை எப்படி செயல்பட்டுள்ளனர்? என்பதற்கான அறிக்கைகளையும் அதிகாரிகள் மூலம் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் விஜய் தங்கள் மீது அதிருப்தியில் இருப்பதை அறிந்த அமைச்சர்கள் சிலர் அமைச்சரவையில் தவிர்க்க முடியாத அமைச்சர்கள் சிலர் மற்றும் அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரம் மூலமாக அமைச்சர் பதவியை தக்கவைக்கவும் காய் நகர்த்தி வருகிறார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

SP Velumani vs EPS : தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
ஆண்டுக்கு 3.25 லட்சம் அப்பாவிகள் பலி! - சிகரெட் புகையால் ஏற்படும் பேரவலம் குறித்து அன்புமணி அதிர்ச்சி தகவல்!
ஆண்டுக்கு 3.25 லட்சம் அப்பாவிகள் பலி! - சிகரெட் புகையால் ஏற்படும் பேரவலம் குறித்து அன்புமணி அதிர்ச்சி தகவல்!
பட்டினப்பாக்கத்தில் புது தலைமைச் செயலகம்? போக்குவரத்து, இடப்பற்றாக்குறை சவால்- அன்புமணி எதிர்ப்பு
பட்டினப்பாக்கத்தில் புது தலைமைச் செயலகம்? போக்குவரத்து, இடப்பற்றாக்குறை சவால்- அன்புமணி எதிர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani vs EPS : தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
Nirmalkumar: ”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
TN Govt: பழனி நிலம் முறைகேடு டூ முன்கூட்டியே கசிந்த ரகசியம் வரை - தூக்கி அடிக்கப்பட்ட குமரகுருபரன் IAS? அதிர்ச்சி பின்னணி
பழனி நிலம் முறைகேடு டூ முன்கூட்டியே கசிந்த ரகசியம் வரை - தூக்கி அடிக்கப்பட்ட குமரகுருபரன் IAS? அதிர்ச்சி பின்னணி
CAG Smart City: ஸ்மார்ட் சிட்டிக்கான ரூ.10 ஆயிரம் கோடி - கார், டிவி என மடைமாற்றப்பட்ட நிதி - CAG அதிர்ச்சி தகவல்
ஸ்மார்ட் சிட்டிக்கான ரூ.10 ஆயிரம் கோடி - கார், டிவி என மடைமாற்றப்பட்ட நிதி - CAG அதிர்ச்சி தகவல்
TN Weather News: சென்னை, திருவள்ளூருக்கு வார்னிங் - மற்ற மாவட்டங்களில் மழை வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை, திருவள்ளூருக்கு வார்னிங் - மற்ற மாவட்டங்களில் மழை வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
AIADMK: 2 தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக ஆதரவை கேட்ட அதிமுக.. வெற்றி நிச்சயம் என நம்பிக்கை!
AIADMK: 2 தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக ஆதரவை கேட்ட அதிமுக.. வெற்றி நிச்சயம் என நம்பிக்கை!
Embed widget