மேலும் அறிய

குழந்தைகளையும் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு.. குறைக்க முயற்சிக்க எளிய வழிகள்!

வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல் மற்றும் வலிமைப் பயிற்சி ஆகியவற்றின் கலவை கல்லீரல் கொழுப்பை குறைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

கல்லீரல் கொழுப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரையும் பாதிக்கும் பிரச்னையாக மாறி வருகிறது. இதனை தடுக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்பதைக் காணலாம். 

Lancet Journalல் வெளியான தகவலின்படி, “உலகளவில் சுமார் 130 கோடி மக்கள் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் யாருக்கு உருவாகும் என்பதை கணிக்க முடியாது. 

கல்லீரல் கொழுப்பு நோய் 

கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, வகை 2 நீரிழிவு நோய் , அதிக டிரைகிளிசரைடுகள் உள்ளிட்ட கொழுப்பு கல்லீரல் நோய்க்கான பொதுவான காரணங்களாக பார்க்கப்படுகிறது. கொழுப்பு கல்லீரலால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட பல்வேறு வழிகள் உள்ளன. 

என்னென்ன செய்ய வேண்டும்?

ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், மீன், நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால் நிறைந்த உணவுகள் போன்ற பொதுவான பொருட்கள், கல்லீரலைச் சரிசெய்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. இத்தகைய உணவுகளில் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் பண்புகள் அடங்கியுள்ளன. தங்கள் உடல் கொழுப்பைக் குறைக்க விரும்புவோர், ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் சமநிலையைக் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும்.

மிதமான அளவில் காபி அருந்துவது கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்கும்.  இதனை தொடர்ந்து பின்பற்றினால் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு உள்ளவர்களுக்கு 35% வரை அபாயத்தைக் குறைக்க முடியும். 

வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல் மற்றும் வலிமைப் பயிற்சி ஆகியவற்றின் கலவை கல்லீரல் கொழுப்பை குறைக்கும். தங்கள் கல்லீரல் கொழுப்பைக் குறைக்க விரும்புவோர் அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதற்குத் தங்களின் தினசரி உடற்பயிற்சி இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். அதிகப்படியான சர்க்கரைகள் மற்றும் சோடியம், கொழுப்பு எண்ணெய்கள், நிறைவுற்ற கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமற்ற பொருட்கள், நீண்ட காலப்போக்கில் கல்லீரல் செல்களை மாற்றுகின்றன.

உடல் எடை குறைப்பும் கொழுப்பு நிறைந்த கல்லீரலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, ஏனெனில் 5-10% எடை குறைப்பு கூட கல்லீரல் கொழுப்பின் அளவை மேம்படுத்தக்கூடும்.

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய MISSO ரோபோடிக் தொழில்நுட்பம்: முழங்கால் மாற்று சிகிச்சையில் புதிய புரட்சி..
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய MISSO ரோபோடிக் தொழில்நுட்பம்: முழங்கால் மாற்று சிகிச்சையில் புதிய புரட்சி..
500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு... தென் தமிழகத்தில் மருத்துவப் புரட்சி !
500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு... தென் தமிழகத்தில் மருத்துவப் புரட்சி !
காசநோய் ஒழிப்புக்கு இளைஞர் சக்தி: 'ஜோஷ்' அணியை தொடங்கி வைத்தார் ஆட்சியர்!
காசநோய் ஒழிப்புக்கு இளைஞர் சக்தி: 'ஜோஷ்' அணியை தொடங்கி வைத்தார் ஆட்சியர்!
குழந்தை இதய சிகிச்சையில் சென்னை அப்போலோவின் உலக சாதனை !! திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு விடை
குழந்தை இதய சிகிச்சையில் சென்னை அப்போலோவின் உலக சாதனை !! திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு விடை
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
Embed widget