மேலும் அறிய

Belly Reduction : தொப்பையை சீக்கிரமா குறைக்கணுமா? இதை தவறாம குடிங்க.. சீக்கிரமே பலன் தெரியலாம்..

துரித உணவுகளை தவிர்த்து நன்கு ஆரோக்கியமான தானிய வகைகள்,பழங்கள் காய்கறிகளை உணவாக எடுத்துக்கொள்ளும் போது  உடல் சமநிலையில் இருக்கும்.

பொதுவாக எல்லோருக்குமே உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்து கொண்டேதான் இருக்கும். சிலர் என்னதான் முயற்சிகளை செய்தாலும் உடல் எடை குறையுமே தவிர தொப்பை குறையாது. தொப்பை  பிள்ளையார் வயிற்றை போன்று முன்னால் தள்ளிக்கொண்டே இருக்கும்.

 ஆகவே இந்த  உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்கு சில பானங்களை அருந்தினால் சீக்கிரமாக தொப்பை கரைந்து விடும் என பரிந்துரைக்கப்படுகிறது. உடல் எடையை சீக்கிரமாக குறைத்து விடலாம் ஆனால் இந்த தொப்பையை குறைப்பது என்பது சற்று கடினம்தான் . ஆகவே அதற்காகவே தனியாக உடற்பயிற்சிகளையும், பானங்களையும் அருந்தி முயற்சிகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

உடல் நிறை குறியீட்டெண் BMI, ஆரோக்கியமான உடல் எடையை.  அளந்து காட்டும் கருவியாகும். வெறும் பிஎம்ஐ மட்டும் இருந்தால் போதாது என்ற உண்மையை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் அளவான சமநிலையை கொண்டிருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

நமது உடல் அமைப்பான BCA ஐ பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தசை மற்றும் இடுப்பை சுற்றிய பகுதிகளில் எவ்வளவு விகிதம்  கொழுப்பு இருக்கிறது  என்பதைக் கண்டறிந்து அதனை குறைப்பதற்கான  வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இடுப்பு பகுதியில் அமைந்துள்ள தசை பகுதியானது ஆரோக்கியமான உடல்நிலையை எடுத்துக் காட்டும் என கூறப்படுகிறது.

வயிறு பானை போல பெருத்து தொப்பை வருவதற்கு மிக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது, துரித உணவுகளை தவிர்த்து நன்கு ஆரோக்கியமான தானிய வகைகள்,பழங்கள் காய்கறிகளை உணவாக எடுத்துக்கொள்ளும் போது  உடல் சமநிலையில் இருக்கும்.

மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் உட்கொள்வது, கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை அதிகளவாக உண்பதன் காரணமாக தொப்பை பகுதியில் கொழுப்பு ஏற்படுகிறது. இது தோற்றத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், பல வித நோய்களையும் உண்டாக்கிறது.

உணவுகளை தவிர்த்து தினமும் தொப்பையை குறைப்பதற்கு என போதிய அளவில் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் தண்ணீர் போதிய அளவு குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை  வெளியேறிவிடும். அதேபோல் தினமும் நார்ச்சத்து உள்ள  காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சீரான தண்ணீர் ஒழுங்கான உணவு முறையை பின்பற்றி வரும் பட்சத்தில் இடுப்பை சுற்றியுள்ள அதிகளவான கொழுப்பானது கரைந்து விடும் என்பது உண்மை. எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்திய குறிப்புகள் நிச்சயம் உங்கள் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் எளிமையாக குறைக்க முடியும். AW/H விகிதம் ஆண்களுக்கு >0.9 மற்றும் பெண்களில் >0.85 என்பது தொப்பை கொழுப்பின் அறிகுறியாகும். இந்த அளவிலிருந்து சற்று குறையலாமே தவிர ஆனால் அதிகரிக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வயிற்றில் தொங்கும் அளவிற்கு தொப்பை வளர்வது என்பது பெரிய அளவிலான நோய்களை உண்டு பண்ணும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வயிற்றுப் பகுதி தொங்கும் அளவிற்கு பெருத்து கொழுப்பு நிறைந்து கழிவுகள் உள்ளே தங்குவதால் புற்றுநோய் ஏற்படும் சாத்திய கூறி இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் அதிகளவான கொழுப்பு மற்றும் இன்சுலின் போன்றன சீராக இல்லாமல் நீரழிவு நோய் போன்றவற்றை ஏற்படுத்தவும் காரணமாக அமைகின்றன.

உடற்பயிற்சி ,சீரான உணவு பழக்கம், அத்துடன் உடலில் உள்ள அதிகளவான கொழுப்பை வெளியேற்றுவதற்கான பானங்களையும் அருந்துவதால் தொப்பையை குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொப்பையை குறைக்கும் பானங்கள்:

1. கிரீன் டீ:

கிரீன் டீ உடலில் உள்ள  அதிகளவான கொழுப்புகளை குறைத்து உடலை நன்கு ஆரோக்கியத்துடன் வைக்கக் கூடிய ஒரு தேநீர் வகை என கூறப்படுகிறது. ஒட்டுமொத்த எடை இழப்பில் கிரீன் டீயின்  பங்கு அதிக அளவு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. க்ரீன் டீயில் பாலிஃபீனால் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதோடு , உடலுக்கு நல்ல ஆக்ஸினேற்றியாகவும் செயல்படுகிறது. உடலின் உள்ளுறுப்புகளில் அதிக அளவில் படிந்துள்ள கொழுப்பை கிரீன் டீ குறைக்க உதவும் என சீன ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 இந்த கிரீன் டீ யானது பசி ஏற்படுவதை தடுத்து அதிக அளவிலான ,  கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.

 2. இலவங்கப்பட்டை தேநீர்:

இலவங்கப்பட்டை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு மசாலாப் பொருள் வகையாகும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி ,இன்சுலின் சுரப்பை கட்டுப்பாட்டிற்குள்  வைத்திருக்கிறது. அதேபோல் இலவங்கப்பட்டை மன உளைச்சலுக்கு ஏற்ற மருந்தாகும் என கூறப்படுகிறது, இது மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலைக் குறைக்கிறது.  கார்டிசோல் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அடிவயிற்றில் கொழுப்பு அதிகளவில் படியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் சர்க்கரை மற்றும் கொழுப்பு உணவுகளை அதிக அளவில் விரும்பி உண்ணக் கூடிய தூண்டுதலையும் இது ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இலவங்கப்பட்டை உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும் ஒரு அருமருந்தாகும். லவங்கப்பட்டை தேனீரை தொடர்ந்து உட்கொள்வதால் சர்க்கரை, கொழுப்பின் அளவு குறைந்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சொல்லப்படுகிறது. காலம் காலமாக நமது சமையல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த லவங்கப்பட்டை மசாலா டீ குடிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குகிறது.
உடலில் உள்ள கூடுதல் கொழுப்பைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல்,  நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது குளிர்காலத்தில் உடலின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு அருந்தக்கூடிய சிறந்த பானமாக இருக்கிறது. 

3. காபி:

உடலின் உள்ளுறுப்புகளில் படிந்துள்ள கொழுப்பை கரைப்பதில் காஃபி முக்கிய பங்காற்றுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக காபி உட்கொள்வதன் மூலம் அதாவது ஒரு நாளைக்கு 3 கப் அளவுக்கு காபியை குறித்த அளவுகளில் மிதமாக உட்கொள்வது, உடல் கொழுப்பைக் குறைத்து நல்ல மாற்றத்தைக் ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. குறிப்பாக வயிற்றுப் பகுதி உள்ளுறுப்புகளில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை இந்த காபியில் உள்ளதை ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். காபியில் உள்ள பாலிஃபீனால்கள் ,குளோரோஜெனிக் அமிலங்கள் , தொப்பை கொழுப்பைக் குறைக்கின்றன. இருந்தபோதிலும் இந்த காபியை மிதமான அளவு உட்கொண்டால் போதும் என்று என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சர்க்கரை இல்லாத, பால் கலக்காத 2-3 கப் கருப்பு காஃபி வயிற்றில் உள்ள கொழுப்பை நன்கு குறைக்கும் என கூறப்படுகிறது.

 
4. தேன்:

குளிர்காலத்தில் சோர்ந்து போகும் உடலை உற்சாகப்படுத்தவும், உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைப்பதிலும் இந்த தேன் முக்கிய பங்காற்றுகிறது. இளம் சூடு கொண்ட தண்ணீரில் தேன் இரண்டு ஸ்பூன்,  அரை எலுமிச்சை சாற்றை பிழிந்து காலை வேளையில் குடிப்பதன் மூலம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை தருவதோடு அதிகப்படியான கலோரிகளையும் வெளியேற்றுகிறது.   குறிப்பாக W/H விகிதம் மற்றும் உள்ளுறுப்பு உடல் பருமன் போன்றவற்றை விரைவில் இந்த தேன் பானமானது சரி செய்கிறது.  தேன் உடலுக்கு நல்ல ஆற்றலைத் தருவதாகவும், அதிக அளவிலான பசி ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தேன் ஒரு நல்ல ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், உள்ளுறுப்புகளில் கொழுப்பு செல்கள் உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து சீராக்குகிறது.

இந்த அற்புதமான சூடான தேநீர் வகைகளை எடுத்துக்கொள்ளும் போது உடலில் அதிகளவாக சேர்ந்துள்ள கலோரிகளையும் கொழுப்புகளையும் குறைத்து தொப்பையை கரைத்து  உடலை சமநிலைப்படுத்துகிறது.

ஆகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு  இயற்கையான உணவு பழக்கம், நல்ல உடற்பயிற்சி இயற்கையான பானங்கள் சிறந்த நன்மையை தரும்.

மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதுடன், இதுபோன்ற சில விஷயங்களையும் செய்தால், தொப்பை குறைப்பில் பயன் தெரியலாம்..

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget