மேலும் அறிய

மனநலம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பத்து அறிகுறிகள்!

இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு இருப்பதை உணர்ந்தால், மீண்டுவர மூன்று வாரம் எடுத்துக்கொள்ளுங்கள், மீள முடியவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை பார்க்கவேண்டிய நேரம் என்று அர்த்தம்.

நம் மனம் நலமாக இருக்கிறதா என்று நாம் கண்டிப்பாக அறிந்து வைத்திருத்தல் அவசியம். நாம் எந்த வேலை செய்யும் முன்பும் இதனை கவனித்தல் மிகவும் சிறந்தது. ஏனெனில் நாம் செய்யும் அத்தனை வேலைகளோடும் நேரடி தொடர்பு கொண்டுள்ளது நம் மன நலன் தான். அது சீராக இருக்கிறதா, நாம் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம். அதற்கு சில அறிகுறிகள் உள்ளன, நாம் பார்க்கப்போகும் இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணர்ந்தால், அதிலிருந்து மீண்டுவர சரியாக மூன்று வாரம் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மீள முடியவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை பார்க்க தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை பல அறிகுறிகள் இருக்கின்றன என்றாலே உடனடியாக மருத்துவரை அணுகலாம்.

  1. சீர்குலைந்த தூக்கம்

மோசமான தூக்கம் நீங்கள் மனச்சோர்வு அல்லது பதட்டத்தை அனுபவிப்பதற்கு காரணமாக இருக்கலாம். தூங்குவதில் சிரமம் இருந்தால் திடீரென முழிப்பு வரும், எழுந்ததும் மீண்டும் தூங்க முடியாது - இது ஒரு மனநல கவலையின் சமிக்ஞையாக இருக்கலாம். அடிக்கடி அதிகமாகத் தூங்குவதும் ஒரு அறிகுறியாக இருக்கலாம். அது அதிக சோர்வை குறிக்கிறது.

  1. மகிழ்ச்சியின்மை

எப்போதாவது ஒரு மோசமான நாள் வருவது இயல்பானது. மேலும் வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு கட்டத்திலும் சோகத்தைத் தருகிறது. ஆனால், நீங்கள் விரும்பிச் செய்த செயல்களில் குறைவான மகிழ்ச்சியையும்  நீங்கள் வழக்கமாகக் கண்டால், அது ஏதோ சரியாக இல்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் கோல்ஃப் விளையாடுவதையோ அல்லது கிதார் வாசிப்பதையோ அனுபவித்து மகிழ்ந்தாலும், தற்போது அந்த நடவடிக்கைகளில் ஒன்றில் பங்கேற்க ஆர்வமில்லாமல் இருந்தால், அது உங்கள் மன ஆரோக்கியம் சமநிலையில் இல்லை என்பதற்கான குறிகாட்டியாக இருக்கலாம்.

மனநலம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பத்து அறிகுறிகள்!

  1. பசியின்மை.

மனச்சோர்வு மற்றும் பதட்டம் நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பாதிக்கும். சிலருக்கு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை பசியின்மைக்கு வழிவகுக்கும். ஏனெனில் அவர்களுக்கு பசி அல்லது சாப்பிடும் ஆற்றல் இருக்காது. மற்றவர்களுக்கு, மிதமிஞ்சிய உணவு உண்பது, மனச்சோர்வடைந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகளிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும். ஒரு குறுகிய காலத்தில் உங்கள் எடையில் வியத்தகு மாற்றங்களைக் காணும் அளவிற்கு நீங்கள் அதிகமாக சாப்பிடுவதையோ அல்லது குறைவாக சாப்பிடுவதையோ நீங்கள் கவனித்தால், உங்கள் மன ஆரோக்கியத்திற்கான உதவியை நாட வேண்டிய நேரம் இதுவாகும்.

  1. மோசமான உடல் அறிகுறிகள்.

மனச்சோர்வு மற்றும் பதட்டம் வியர்வை, விரைவான இதயத் துடிப்பு, தலைச்சுற்றல், இரைப்பை குடல் அறிகுறிகள் மற்றும் தலைவலி உள்ளிட்ட உடல் ரீதியான பக்க விளைவுகளைக் கொண்டு வரலாம். வேறு எந்த மருத்துவ காரணமும் இல்லாமல் உடல் அறிகுறிகள் திடீரென தோன்றினால், அது உங்கள் மனநலம் குறைவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

  1. குறைந்த ஆற்றல்.

சோர்வு மற்றும் சோம்பல் போன்ற உணர்வுகள் மனநலத்துடன் போராடும் மக்களிடமும் பொதுவானவை. மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ மந்தமாக இருப்பது, கவனம் செலுத்துவது, உரையாடல்களைப் பின்பற்றுவது அல்லது விரைவாகச் சிந்திப்பது ஆகியவற்றை கடினமாக்கும். படுக்கையில் இருந்து எழுவதற்கான உந்துதலைக் கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் அளவுக்கு உங்களிடம் குறைந்த ஆற்றல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பத்து அறிகுறிகள்!

  1. சிறு விஷயங்களில் நாட்டமில்லாதது

புத்தகம் படித்தல், இசை, இசை கருவிகள் இயக்குதல், சிறு கைவினை பொருட்கள் செய்தல், எழுதுதல், படம் வரைதல், போன்ற சிறிய விஷயங்களில் நாட்டமின்மை அதிகரிப்பது, அவற்றை நம்மிடம் இருந்து அந்நியம் ஆக்குவது பெரிய பிரச்சனைகளுக்கு வித்திடும். இதனை தவிர்க்க வலுக்கட்டாயமாக இந்த விஷயங்கள் எல்லாம் எடுத்து செய்யவேண்டும். பின்னர் பழகிவிடும்.

  1. அதிக பதட்டத்துடன் இருப்பது

பதட்டம் ஹார்மோன் அவசரத்தை தூண்டுகிறது, இது உங்களை சோர்வாகவும் சக்தியின்றியும் உணர வைக்கும். காலை எழும்போது எந்த காரணமும் இல்லாமல் பதட்டமாக இருக்கலாம், அந்த பதட்டம் சிறிது நேரத்தில் விலகும், ஆனால் சோர்வு உணர்வு அந்த நாள் முழுவதும் நீடிக்கும். நீங்கள் சிறிது ஓய்வெடுத்த பிறகும், சோர்வை அனுபவிக்க நேரிடும், அதுவே பதட்டத்தின் வெளிப்பாடு.

  1. மனதளவில், உணர்வளவில் உடைந்துபோவது

நம்மை சுற்றி நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நமக்கு நிறைய வேலைகள் உள்ளன. எதுவும் முடியாமல் இருக்கிறது. எதை ஸிய்யவும் நேரம் இல்லை என்று நினைத்து எல்லவற்றையும் ஒரு பெரிய பாரமாக மனதில் தூக்கி வைத்துக்கொள்வதால் பெரும் மன அழுத்தம் உண்டாகும். அது நம்மை உடைந்துபோக செய்யும். அதற்கு ஒரே வழி கவனத்தை கொண்டு வருதல்தான். அதற்கு யோகா, தியானம் போன்றவை செய்து மனதை ஒரு நிலை படுத்தவேண்டும். 

மனநலம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பத்து அறிகுறிகள்!

  1. கவனமின்மை

உதாரணமாக இப்போது நாம் ஒரு புத்தகத்தை படிக்கிறோ என்றால், அதில் ஒரு பத்தியை படித்து அடுத்த பத்திக்கு செல்லாமல், மீண்டும் அறியாமல் அதையே படித்துக்கொண்டிருப்பது. மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு நமக்குள் நடந்துகொண்டே இருப்பது. இதிலிருந்து மீள நமக்கு உதவியாக யாரும் இருக்க மாட்டார்கள். இதற்கு காரணம் நம்மை நாமே பாதுகாத்து கொள்ளாததுதான். நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டியது நம் கடமை, அப்படி பாதுகாத்தால், அதிலிருந்து வெளியில் வரும் உதவி தானாக கிடைக்கும்.

  1. மனக்கிளர்ச்சியை கட்டுப்படுத்துதல்

பொய் சொல்லுதல், திருடுதல், பொருட்களை உடைத்தல், உடல் மற்றும் வாய்மொழியில் திடீர் செயல்பாடுகள், மற்ற மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவித்தல், வசைபாடுதல், கட்டாயமாக சாப்பிடுவது அல்லது வழக்கத்திற்கு அதிகமாக சாப்பிடுவது ஆகியவை மணக்கிளற்சியை கட்டுப்படுத்த தவறும்போது உண்டாகும் பிரச்சனைகள். கவனத்தை அதிகரித்தல், பிடித்த விஷயங்களில் மனதை ஈடுபாட்டுடன் வைத்திருத்தல் ஆகியவை இதில் இருந்து மீண்டு வர உதவும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
DMK Vs ADMK: அதிமுக கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலர்... சேலத்தில் பரபரப்பு
அதிமுக கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலர்... சேலத்தில் பரபரப்பு
Actor Rajesh Death: நடிகர் ராஜேஷ் பெரிய நடிகர் ஆகாம போனதுக்கு எம்.ஜி.ஆர்தான் காரணம் - ஏன்?
Actor Rajesh Death: நடிகர் ராஜேஷ் பெரிய நடிகர் ஆகாம போனதுக்கு எம்.ஜி.ஆர்தான் காரணம் - ஏன்?
Embed widget