போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கார்த்திக்கின் அச்சம்:
நேற்றைய எபிசோடில், ரேவதியை சாமுண்டீஸ்வரி அவசரமாக ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் செல்வது போல கார்த்திக் கண்ட கனவு பெரும் சந்தேகத்தை கிளப்பிய நிலையில், இன்று மேலும் பல அதிரடி திருப்பங்கள் காத்திருக்கின்றன.
கனவில் கண்ட காட்சியால் பதற்றத்துடன் விழித்தெழும் கார்த்திக்கின் மனதில், "ஏதோ தவறு நடக்கப் போகிறது" என்ற எண்ணம் ஆழமாக பதிகிறது. உடனே ரேவதிக்கு போன் செய்து நலம் விசாரிக்க, அவளோ எல்லாம் சரியாக இருப்பதாக கூறுகிறாள். ஆனால் கார்த்திக்கின் சந்தேகம் மட்டும் குறையவில்லை.
அடுத்த நாள் கோவிலில் கார்த்திக்கை சந்திக்கும் ரேவதி, கனடா செல்லும் விஷயத்தை தெரிவிப்பதோடு, தனது விமான டிக்கெட்டையும் அவனுக்கு அனுப்புகிறாள். மேலும், தனது பயணம் வெற்றிகரமாக அமைய கார்த்திக்கின் கையால் குங்குமம் வைத்து ஆசீர்வதிக்கச் சொல்கிறாள்.
அபசகுணம்:
உணர்ச்சிபூர்வமாக நகரும் இந்த தருணத்தில், கோவிலை விட்டு வெளியேறும் ரேவதிக்கு திடீரென கால் தடுக்கிறது. இதை நல்ல அறிகுறியாக எடுத்துக்கொள்ளாத கார்த்திக், அவளை சில நிமிடங்கள் அமர வைத்து அனுப்பி வைக்கிறான்.
ஆனால் அதன்பிறகு கார்த்திக்கின் சந்தேகம் மேலும் அதிகரிக்கிறது. ரேவதி அனுப்பிய டிக்கெட்டை மீண்டும் ஆராயும் அவன், நேரடியாக சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு சென்று விசாரிக்கிறான். அப்போது வெளிவரும் உண்மை அவனை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ரேவதியிடம் இருக்கும் டிக்கெட் போலியானது என்பதோடு, இந்த முழு ஏற்பாட்டின் பின்னணியில் சந்திரகலா இருப்பதும் தெரிய வருகிறது.
சதி செய்த சந்திரகலா:
உடனடியாக ரேவதியை எச்சரிக்க முயலும் கார்த்திக், அவளுக்கு தொடர்ந்து போன் செய்கிறான். ஆனால் இங்கேயும் சந்திரகலாவின் சூழ்ச்சி வேலை செய்கிறது. ஏர்போர்ட்டுக்கு செல்லும் வழியிலேயே ரேவதியின் மொபைலை கையில் எடுத்து, கார்த்திக்கின் எண்ணை ரகசியமாக பிளாக் செய்து விடுகிறாள். இதனால் கார்த்திக்கின் எந்த அழைப்பும் ரேவதியை சென்றடைவதில்லை.
பதற்றத்தின் உச்சத்தில் இருக்கும் கார்த்திக், உடனடியாக மயில்வாகனத்தை தொடர்பு கொள்கிறான். ஆனால் அவர் கூறும் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதனால் நேரத்தோடு போராட வேண்டிய சூழ்நிலையில் சிக்குகிறான் கார்த்திக். ரேவதி ஆபத்தில் சிக்குவதற்கு முன் கார்த்திக் அவளை காப்பாற்றுவானா? சந்திரகலாவின் திட்டம் வெற்றியடையுமா? கடைசி நிமிடத்தில் ஏர்போர்ட்டிற்கு செல்லும் கார்த்திக், ரேவதியின் பயணத்தை தடுத்து நிறுத்துவானா? விறுவிறுப்பும், சஸ்பென்ஸும் நிறைந்த இந்தக் கட்டத்தை இன்றைய எபிசோடில் தவறாமல் காணுங்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















