Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers August 2026: ஆகஸ்ட் 2026-ல் EV6 மற்றும் EV9 தவிர்த்து மற்ற மாடல்களுக்கு கியா சலுகைகளை அள்ளிக் கொடுத்துள்ளது. எந்தெந்த காருக்கு என்னென்ன தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன?

புதிய சைரோஸ் EV மற்றும் ஃபிளாக்ஷிப் சோரெண்டோ SUV வருகையை ஒட்டி, ஆகஸ்ட் 2026-ல் EV6 மற்றும் EV9 தவிர்த்து மற்ற மாடல்களுக்கு கியா சலுகைகளை அள்ளிக் கொடுத்துள்ளது. எந்தெந்த காருக்கு என்னென்ன தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன?
அதன் முழு விவரங்கள் இதோ!
1. கேரன்ஸ் க்ளாவிஸ்: விலை ரூ.11.27 லட்சம் - ரூ.21.67 லட்சம் (போட்டி: மாருதி XL6). அதிகபட்ச சலுகை ரூ.1.2 லட்சம்.
MY26: ரூ.10,000 ரொக்கம், ரூ.20,000 லாயல்டி, ரூ.15,000 கார்ப்பரேட், ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச்/ ஸ்கிராப்பேஜ்.
MY25: கார்ப்பரேட் தவிர்த்து மேற்கண்ட சலுகைகள் மற்றும் ரூ.75,000 ரொக்கம்; இதன் டர்போ-பெட்ரோலுக்கு மட்டும் இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.
2. கார்னிவல்: விலை ரூ.59.65 லட்சம் (கியாவின் விலை உயர்ந்த ICE மாடல்). அதிகபட்ச சலுகை ரூ.1.5 லட்சம்.
MY26: ரூ.1 லட்சம் எக்ஸ்சேஞ்ச்/ ஸ்கிராப்பேஜ், ரூ.50,000 கார்ப்பரேட்.
MY25: ரூ.20,000 ஸ்கிராப்பேஜ் மட்டும்.
3. கேரன்ஸ் க்ளாவிஸ் EV: விலை ரூ.18.04 லட்சம் - ரூ.25 லட்சம் (சந்தையின் மலிவான எலக்ட்ரிக் MPV; போட்டி: BYD e MAX 7, XEV 9S).
அதிகபட்ச சலுகை ரூ.55,000.
MY26: ரூ.20,000 லாயல்டி, ரூ.15,000 கார்ப்பரேட், ரூ.20,000 ஸ்கிராப்பேஜ்/எக்ஸ்சேஞ்ச்.
MY25: அதிக ரேஞ்ச் தரும் எக்ஸ்டெண்டட் ரேஞ்ச் (ER) மாடல்களுக்கு மட்டும் தலா ரூ.20,000 லாயல்டி மற்றும் ஸ்கிராப்பேஜ்.
4. சைரோஸ் காம்பேக்ட் SUV: விலை ரூ.8.42 லட்சம் - ரூ.15.82 லட்சம் (போட்டி: 3XO, Venue, Brezza). அதிகபட்ச சலுகை ரூ.50,000.
MY26: ரூ.10,000 ரொக்கம், ரூ.15,000 கார்ப்பரேட், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச்/ ஸ்கிராப்பேஜ்.
MY25: ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச்/ஸ்கிராப்பேஜ், இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டி.
5. சொனெட்: விலை ரூ.7.41 லட்சம் - ரூ.14.37 லட்சம் (போட்டி: Kushaq, Nexon, Syros).
அதிகபட்ச சலுகை ரூ.45,000.
MY26: ரூ.10,000 ரொக்கம், ரூ.15,000 கார்ப்பரேட், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச்/ ஸ்கிராப்பேஜ்.
MY25: ஸ்கிராப்பேஜ் மட்டும்.
6. செல்டோஸ்: விலை ரூ.11 லட்சம் - ரூ.21.82 லட்சம் (போட்டி: Creta, Taigun, Duster, Sierra, Kushaq, Astor, Aircross, Victoris, Grand Vitara). சலுகை ரூ.40,000.
2-ஆம் தலைமுறை: தலா ரூ.20,000 லாயல்டி, ஸ்கிராப்பேஜ்.
1-ஆம் தலைமுறை: ஸ்கிராப்பேஜ் மட்டும்.
7. பட்ஜெட் கேரன்ஸ் MPV: விலை ரூ.11.02 லட்சம் - ரூ.12.88 லட்சம் (போட்டி: Ertiga, Rumion).
அதிகபட்ச சலுகை ரூ.35,000.
MY26: ரூ.15,000 கார்ப்பரேட், ரூ.20,000 ஸ்கிராப்பேஜ்/எக்ஸ்சேஞ்ச்.
MY25: ஸ்கிராப்பேஜ் மட்டும்.
ட்ரெண்டிங் செய்திகள்























