மேலும் அறிய

பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?

Ponmudi Arrest Court order : சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து சிக்கல்

திமுக மாஜி அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து சிக்கல் உருவாகி வருகிறது. அந்த வகையில், தவெக ஆட்சியை கலைக்கும் வகையில் அந்த கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீசார் கைது செய்ய திட்டமிட்டனர். அடுத்ததாக டாஸ்மாக் முறைகேடு வழக்கிலும் போலீசார் கைது செய்ய திட்டமிட்ட நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவாக இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் கொடுத்த ஜாமின் உத்தரவால் நிம்மதி அடைந்தார்.

அடுத்ததாக போடப்படாத சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகாரில் எ.வ.வேலுவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. போலீசார் எ.வ.வேலுவை கைது செய்ய திட்டமிட்ட நிலையில், விசாரணைக்கு நேரில் எ.வ.வேலு ஆஜரானார். அடுத்தாக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றதாக வந்த புகாரையடுத்து முன்னாள் அமைச்சர் சிவசங்கரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார்.

பொன்முடியை கைது செய்ய பிடிவாரண்ட்

இதே போல முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசிய புகாரில் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் உச்சகட்டமாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று பொன்முடியை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து அவர் கூறிய சில கருத்துகள் பல தரப்பினரால் மத உணர்வுகளையும் பெண்களையும் இழிவுபடுத்துவதாக விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தப் பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்துங்கள்

இதனால் தமிழக அமைச்சரவையில் இருந்தும் பொன்முடி விடுவிக்கப்பட்டார். இந்த பேச்சு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில்,  விசாரணைக்கு பொன்முடி நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து பொன்முடியை கைது செய்து  செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும்- சீறிய உதயநிதி
சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும்- சீறிய உதயநிதி
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Embed widget