மேலும் அறிய

Youtuber Irfan: நேரடியாக சென்று மருத்துவ இயக்குநரிடம் மன்னிப்பு... இர்ஃபானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை என்ன?

Youtuber Irfan: சர்ச்சை வீடியோ வெளியிட்ட விவகாரம் குறித்து இர்ஃபான், மருத்துவ இயக்குநரை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளார்.

'இர்ஃபான் வியூஸ்' என்ற பெயரில் உள்ளூர் முதல் உலகளவில் உள்ள பல்வேறு உணவுகள் குறித்து அந்த இடத்திற்கு நேரடியாக சென்று வீடியோ வெளியிடுவதன் மூலம் பிரபலமானவர் யூடியூபர் இர்ஃபான். இவரின் சோசியல் மீடியா பக்கங்களை லட்சக்கணக்கான ஃபாலோவர்கள் பாலோ செய்கிறார்கள். அவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவுமே மில்லயன் கணக்கான வியூஸ் பெற்று வருகிறது. அந்த வகையில் தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Youtuber Irfan: நேரடியாக சென்று மருத்துவ இயக்குநரிடம் மன்னிப்பு... இர்ஃபானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை என்ன?

இர்ஃபான் மனைவி ஹசீஃபா தற்போது கர்ப்பமாக இருப்பதால் துபாய் சென்று அங்கு ஸ்கேன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் மூலம் அறிந்துள்ளார். அதனோடு நிற்காமல் அதை அனைவருக்கும் அறிவிப்பதை ஒரு விழாவாக கொண்டாடி அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டார். அவரின் இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ் பெற்றது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனை செய்வதும் அதை அறிவிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இர்ஃபானின் இந்த செயலுக்கு கடும் கண்டங்கள் எழுந்து விஸ்வரூபம் எடுத்ததுடன் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

Youtuber Irfan: நேரடியாக சென்று மருத்துவ இயக்குநரிடம் மன்னிப்பு... இர்ஃபானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை என்ன?

இது தொடர்பாக சுகாதாரத்துறை இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவர்களை தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரினார்.  இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. இருப்பினும் மருத்துவக்குழு இர்ஃபான் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மருத்துவ இயக்குநரை நேரில் சந்தித்து இர்ஃபான் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

சென்னை டி.எம்.எஸ் வளாகத்திற்கு நேரடியாக சென்று மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரை சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து மன்னிப்பு கோரியதாக கூறப்படுகிறது. அவரின் மன்னிப்பு கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இர்ஃபானுக்கு  நிபந்தனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

அதாவது கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இர்ஃபான் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் கருக்கலைப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் சுகாதாரத்துறை இர்ஃபான் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: நீட், நெட் தேர்வு விவகாரம்; ஒருவர் கூடத் தப்பிக்க முடியாது- மத்திய அரசு உறுதி!
Breaking News LIVE: நீட், நெட் தேர்வு விவகாரம்; ஒருவர் கூடத் தப்பிக்க முடியாது- மத்திய அரசு உறுதி!
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: நீட், நெட் தேர்வு விவகாரம்; ஒருவர் கூடத் தப்பிக்க முடியாது- மத்திய அரசு உறுதி!
Breaking News LIVE: நீட், நெட் தேர்வு விவகாரம்; ஒருவர் கூடத் தப்பிக்க முடியாது- மத்திய அரசு உறுதி!
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Indian 2:
Indian 2: "தாத்தா வராரு..கதற விட போறாரு” - இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் என்னைக்கு தெரியுமா?
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
Embed widget