மேலும் அறிய

Bonda Mani: சிகிச்சையிலிருந்த நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் அபேஸ் செய்த இளைஞர் கைது!

நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் அவருக்கு உதவி செய்தனர். தொடர்ந்து சிகிச்சை முடிந்து போண்டா மணி வீடு திரும்பினார்.

சிறுநீரக செயலிழப்பால் அரசு மருத்துவனையில் சிகிச்சையில் இருந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1994 ஆம் ஆண்டில் வெளியான  ‘தென்றல் வரும் தெரு’ படம் போண்டா மணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து கவுண்டமணி, வடிவேலு, விவேக்குடன் இணைந்த அவர்,  ‘நான் பெத்த மகனே’, ’சுந்தரா டிராவல்ஸ்’,  ‘அன்பு’, ’திருமலை’, ’ஐயா’,  ‘ஆயுதம்’, ’வின்னர்’,  ‘வேலாயுதம்’, ‘படிக்காதவன்’,  ‘மருதமலை’ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த இரு வாரத்திற்கு முன் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரின்  மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் தனக்கு உதவ வேண்டும் என போண்டா மணி கோரிக்கை விடுத்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் அவருக்கு உதவி செய்தனர். தொடர்ந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போண்டா மணியை வீட்டிற்கு வந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் நலம் விசாரித்து நிதியுதவி வழங்கினர். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது உதவுவது போல நடித்து ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராஜேஷ் ப்ரீத்திவ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருடியது யார்?

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், மருத்துவமனையில் போண்டா மணி சிகிச்சையில் இருந்த போது அவருக்கு ராஜேஷ் என்பவர் அறிமுகமாகி உதவிகளை செய்துள்ளார். அதனைப் பார்த்து நம்பிய போண்டாமணியின் மனைவி தேவி அவரிடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். இதனை வாங்கிய ராஜேஷ் அதன்மூலம் நகைக்கடை ஒன்றில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நகையை வாங்கியுள்ளார். தன் செல்போனுக்கு வந்த குறுந்தகவலைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவி, இதுதொடர்பாக போரூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த  போலீசார் விழுப்புரம் அருகே பதுங்கியிருந்த ராஜேஷைக் கைது செய்து அவரிடமிருந்த நகையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Embed widget