ABP Nadu Exclusive: ஃபர்ஸ்ட் ஃப்ரேம் வித் செல்வராகவன்...சாணிக்காயிதம் ஷூட்டிங் ஸ்பாட் மெமரிஸ்.. ஒளிப்பதிவாளர் யாமினி நேர்காணல்!
Saani Kaayidham Cinematographer Interview: கடைசி நாள்தான் செல்வராகவன் சார் எங்கிட்ட வந்து பேசினாரு..‘நானே வருவேன்’ படத்துல வந்து வேலை செய்ய முடியுமான்னு கேட்டாரு என்றார் ஒளிப்பதிவாளர் யாமினி.
செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் சாணிக்காயிதம். ‘ராக்கி’படம் மூலம் பிரபலபடைந்த அருண்மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு சில்லுக்கருப்பட்டி படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் யாமினியின் ஃப்ரேம்கள் பற்றி பலரும் பேசிக்கொண்டிருக்க, அவரை தொடர்பு கொண்டு உரையாடலை தொடங்கினேன்.
உங்களைப் பற்றி சொல்லுங்கள்?
நான் விஷூவல் கம்யூனிகேஷன் கிராஜூவேட்தான். காலேஜ் முடிச்சிட்டு கிராபிக் டிசைனராக வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்படியே கமர்ஷியல் ஃபுட் போட்டோகிராபியும் பண்ணிட்டு இருந்தேன். அப்பத்தான் லைட்டிங் மேல இன்ட்ரஸ்ட் வந்திச்சு. வீட்டுல இருக்குறவங்க எல்லாத்தையும் நேச்சுரல் லைட்ஸ வைச்சு போட்டோக்கள எடுக்க ஆரம்பிச்சேன்.
அதுமேல இருந்த ஈர்ப்பு அதிகமாக அதிகமாக ஒளிப்பதிவாளராக ஆகலாம்னு முடிவெடுத்து வேலையை விட்டேன். ஆனா எனக்கு திரும்பவும் காலேஜ் போறதுல உடன்பாடு இல்ல. அதனால யார்ட்டயாவது அசிஸ்டெண்ட்டா ஜாய்ன் பண்ணி தொழில கத்துக்கலாம்னு நினைச்சேன். அப்படித்தான் ஒரு நாள் பிசி ஸ்ரீராம் சாருக்கு என்னோட புரொபைலை ஃபேஸ்புக்குல அனுப்பி வைச்சேன்.
அவர் உடனே ரிப்ளை பண்ணி அரைமணி நேரத்துல ஆபிஸ் வர சொன்னாரு. உடனே போனேன். என்னை பார்த்துட்டு அடுத்த நாளே வந்து ஜாய்ன் பண்ணிக்கோன்னு சொல்லிட்டாரு. அப்படியே அவர் கூட நிறைய படங்கள் வேலைபார்த்தேன். ‘சைக்கோ’ படம் பண்ணிட்டு இருக்கும் போது, எனக்கு சில்லிக்கருப்பட்டி சான்ஸ் கிடைச்சது.. சார்ட்ட கேட்டேன்.. நீங்க ரெடியா இருக்கீங்க பண்ணலாம்னு சொன்னாரு.. சில்லுக்கருப்பட்டி பண்ணேன்.. இப்ப சாணிகாயிதம்..
பெண்கள் அப்படினாலே சாப்ஃட்டான படங்கள்தான் எடுப்பாங்க அப்படிங்கிற பார்வை இங்க இருக்கு. அந்த வகையில பார்க்கும் போது சாணிகாயிதம் படத்துல வைலன்ஸ் ரொம்ப ஜாஸ்தியா இருந்துச்சே.. உங்களுக்கு வைலன்ஸ் சப்ஜெக்ட் ரொம்ப பிடிக்குமா?
பொதுவாக எந்த மாதிரியான சப்ஜெக்ட்டா இருந்தாலும், அது அந்த டைரக்டரோட விஷன்தான். அந்த வகையில் சில்லுக்கருப்பட்டி படம் ஒரு ஃபேமிலி ட்ராமாவா அமைஞ்சிச்சு. சாணி காயிதம் ரிவேஞ்ச் ஆக்ஷன் படமா வந்துச்சு.
டெக்னீசியனா ஒரு ஸ்கிரிப்ட் எங்களுக்கு பிடிக்குதா பிடிக்கலையா அப்படிங்கிறத தாண்டி, அந்த ஸ்கிரிப்ட்ட ஜஸ்டிஸ் பண்ற இடத்துல நாங்க இருக்கோம். அதனால பெண்கள்னாலே சாப்ஃ ட்டான படங்கள்தான் எடுப்பாங்க அப்படிங்கிறங்கிறதெல்லாம் உண்மை இல்ல.
இந்த ஃபீல்டல ஒரு பெண்ணா ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டமானதாச்சே..?
எந்த ஃபீல்டா இருந்தாலும் அதுல விடாமுயற்சியும், தன்னபிக்கையும் இருந்தாத்தான் ஜெயிக்க முடியும். அது சமையலா இருந்தாலும் சரி , சினிமாவா இருந்தாலும் சரி. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தடங்கல்கள் வரத்தான் செய்யும். அதையும் மீறி கடினமா உழைச்சு, நம்மள நாமளே உத்வேகப்படுத்திக்கிட்டு போயிக்கிட்டே இருக்கணும். அதனால பெண்கள் எங்களுக்குன்னு ஸ்பெஷலா எந்த தடைகளும் இல்லை.. காலம் மாறிடுச்சு.
செல்வராகவன் சார் நடிகரா அறிமுகமாகுற முதல் படம். அவர் பல பேருக்கு ஃபர்ஸ்ட் ஃப்ரேம் வைச்சிருக்காரு.. ஆனா அவருக்கு நீங்கதான் ஃபர்ஸ்ட் ஃப்ரேம் வைச்சிருக்கீஙக.. எப்படி இருந்தது முதல் நாள் அனுபவம்..?
முதல்ல டெஸ்ட் ஷூட் தான் பண்ணோம். அப்ப சார ஃப்ரேம்ல பார்க்கும் போது எனக்கு பயம் கலந்த பொறுப்பு வந்திருச்சு.. அத மனசுல வைச்சிக்கிட்டேதான் வேலையும் பார்த்தேன். கடைசி நாள்தான் அவர் எங்கிட்ட வந்து பேசினாரு..
‘நானே வருவேன்’ படத்துல வந்து வேலை செய்ய முடியுமான்னு கேட்டாரு.. அவர் செட்ல ஒரு புது ஆக்டர் மாதிரிதான் இருந்தாரு. ரொம்ப ஹம்புளா எத்தன வாட்டி டேக் சொன்னாலும் நடிச்சிக் கொடுத்தாரு.
படத்துல லொக்கேஷன்ல இருக்க கூடிய வெறுமையே நமக்கு பாதி கதையை கடத்திடுச்சு.அதுமட்டுமல்லாம லொக்கேஷன்ஸ் எல்லாம் ரொம்ப ட்ரையா இருந்துச்சு.. ஒளிப்பதிவாளரா நீங்க சந்திச்ச சவால் என்ன?
இந்த கிரெடிட் டைரட்டருக்குதான் போகும்.. படத்துல லொக்கேஷன் ரொம்ப முக்கியமான கேரக்டர். அதனால லொக்கேஷனுக்காக ரொம்ப மெனக்கெட்டோம். இன்னொன்னு டைரக்டரரோட ஸ்டேஜிங். அவர் அது ரொம்ப கிளியரா இருந்ததால, என்னோட வேலை ரொம்ப ஈஸியா மாறிருச்சு.
லைட்டிங்க பொருத்தவரை எனக்கு மினிமலிஸ்டிக் லைட்டிங் ரொம்ப பிடிக்கும். சூரியன்ட்ட இருந்து கிடைக்கிற மாதியான லைட் வேற எங்கேயுமே கிடைக்காது. இந்தப்படத்த பொருத்தவரை, நம்மகிட்ட நிறைய லைட்ஸ் இருக்கு. ஆனா அந்த லைட்ஸ யூஸ் பண்ணி, அதன் மூலமா சூரியன்ல இருந்து வர்ற லைட்ஸ ரீகிரியேட் பண்ணி, படத்துல வர்ற கேரக்டரை போல்டா காமிக்கலாம்னு நினைச்சேன். அபப்டித்தான் வொர்க் பண்ணேன்.
எல்லா ஃப்ரேம்ஸூம் ஷேக் ஆகிட்டே இருந்துச்சே..?
படம் முழுக்கவே கேமராவ கையில தான் ஹேண்டில் பண்ணேன். அந்த ஷேக் இருக்கும் போது ஆடியன்ஸூக்கு ஒரு டென்ஷன் இருக்கும்.
பிசி சார் படம் பார்த்துட்டு என்ன சொன்னாரு
இல்ல அவர் இன்னும் படம் பார்க்கல.. ட்ரெய்லர் பார்த்தாரு.. பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாரு.