மேலும் அறிய
Advertisement
Devil director Adithya: ”டெவில் பட இயக்குநர் ஆதித்யா என்னை ஏமாற்றி விட்டார்” - ஷாக் கொடுத்த எழுத்தாளர் தேவிபாரதி
Devil director Adithya: “அவரிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. நான் தொடர்ந்து கார்த்திருந்தேன். பிறகு எனக்கு ஆதித்யா ஏமாற்றியதாக தோன்றியது” என்ற எழுத்தாளர் தேவிபாரதி.
Devil director Adithya: இயக்குநர் மிஷ்கினின் சகோதரரும், சவரக்கத்தி படத்தின் இயக்குநருமான ஆதித்யாவால் தான் ஏமாற்றப்பட்டதாக எழுத்தாளர் தேவிபாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
சித்திரம் பேசுதடி, பிசாசு, சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கும் மிஷ்கின், முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமான படம் டெவில். இந்த படத்தை மிஷ்கினின் சகோதரரான ஆதித்யா இயக்கி இருந்தார். இதற்கு முன்னதாக ஆதித்யா இயக்கி இருந்த சவரக்கத்தி படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.
படத்தில் பூர்ணா, விதார்த், திரிகுன் நடித்து அசத்தியுள்ளனர். படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் மிஷிகினின் இசையும் வரவேற்பை பெற்று வருகிறது. எதிர்பாராத விபத்தால் பெண்ணிற்கு ஆணுடன் ஏற்படும் நட்பும், அதனால் ஏற்படும் கொலையும், விபரீதத்தையும் கூறும் ஒரு படமாக டெவில் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெவில் படத்தின் இயக்குநர் ஆதித்யா மீது சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவிபாரதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பகிர்ந்த தகவலில், “ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் ஆதித்யா எங்கள் வீட்டுக்கு வந்தார். திரைப்படத்துக்காக ஒரு கதை எழுதித்தரச் சொல்லி கேட்டார். நண்பர் செல்லாவின் உதவியோடு இதை செய்தேன். ஆனால் பிறகு அந்த முயற்சி கை கூடவில்லை. பிறகு வீட்டுக்கு வந்தார் ஆதித்யா, எனது “ ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்” என்ற சிறுகதையை படமாக்க விரும்பினார். பலகட்ட உரையாடல்களுக்குப் பிறகு நானும் ஆதித்யாவும் பேசினோம்.
பிறகு ஆதித்யாவின் அழைப்பின் பேரில் நான் சென்னை சென்று ஆதித்யாவோடு இணைந்து பணியாற்றினோம். சென்னையில் நடிகர் சங்க கட்டடம் அருகே தங்கியிருந்து ஏறத்தாழ ஒருமாத காலம் பணியாற்றினேன். பிறகு ஊருக்கு திரும்பினேன். பட வேலைகள் நன்றாக போய்க் கொண்டிருப்பதாக ஆதித்யா அவ்வபோது செல்வார். படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு அழைத்தார். நான் கலந்துக் கொண்டேன். பிறகு அதுபற்றி எந்த தகவலும் இல்லை. உதவியாளர் ஒருவர் பேசினார்.
பிறகு அவரிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. நான் தொடர்ந்து காத்திருந்தேன். பிறகு எனக்கு ஆதித்யா ஏமாற்றியதாக தோன்றியது” என குறிப்பிட்டுள்ளார். தன்னை இயக்குநர் ஆதித்யா ஏமாற்றியதாக எழுத்தாளர் தேவிபாரதி குற்றம்சாட்டி இருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Director Nagaraj: குடித்துவிட்டு விஜய்யிடம் கதை சொன்ன இயக்குநர்! நல்ல வாய்ப்பை தவறவிட்ட 'தினந்தோறும்' நாகராஜ்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion