Weapon Movie: சத்யராஜ் - வசந்த் ரவி நடிப்பில் எதிர்பார்ப்பைக் கிளப்பும் ‘வெப்பன்’.. ஷூட்டிங் ஓவர்.. விரைவில் ட்ரெய்லர்!
‘வெப்பன்' படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. விரைவில் படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிக்கும் வெப்பன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் கடந்த மாதம் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதில் வசந்த் ரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரஜினிக்கு மகனாக நடித்து, இறுதியில் வில்லனாக இருக்கும் வசந்த் ரவி கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது.
இதற்கு முன்னதாக வசந்த் ரவி நடித்திருந்த தரமணி படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில் வசந்த் ரவி அடுத்ததாக வெப்பன் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் படம் வெப்பன்.
இதில் வசந்த் ரவி, சத்தியராஜ் முக்கிய கேரக்டர்களில் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் தவிர ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா என பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் வெப்பன் படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. விரைவில் படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் வெப்பன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வெப்பன் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இளம்வயது சத்யராஜை கிராஃபிக்ஸில் படக்குழு உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள வெப்பன் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலிக்கு பிறகு சத்யராஜூக்கு இந்தப் படம் பெரிய அளவில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவர் நடித்திருக்கும் வெப்பன் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றதால் படத்தில் சத்யராஜின் கேரக்டர் அழுத்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Bigg boss 7 Tamil: கூல் சுரேஷ் முதல் பவா செல்லதுரை வரை... இவங்க எல்லாரும் தான் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா!