Watch Video: இதுக்கு என்ன விலையிருக்கு... அம்மாவின் ரியாக்ஷனும்.. மாதவனின் எமோஷ்னல் ட்வீட்டும்..
மகன் ஒருவர் தன்னுடைய தாய்க்கு பிறந்தநாள் பரிசு அளித்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
நம்முடைய வாழ்வில் நாம் நன்றாக வளர்ந்து சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்றால் அது முதலில் தாய்-தந்தை ஆகிய இருவர் மட்டும் தான். அவர்களுக்கு தங்களுடைய பிள்ளைகள் நன்றாக வளர்ந்து சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதையே அவர்கள் விரும்புவார்கள். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு பிள்ளைகள் ஏதாவது ஒரு பரிசை வாங்கி கொடுத்தால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். அந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இருக்காது. அப்படி ஒரு சம்பவம் தாம் சமீபத்தில் நடந்துள்ளது.
இதுதொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,”இந்த மொபைல் போனின் விலை 8800 ரூபாய் தான்.ஆனால் அதற்கு என்னுடைய அம்மா அடைந்த சந்தோஷத்திற்கு விலையே கிடையாது. அவர்களின் பிறந்தநாள் பரிசு” எனப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவருடைய தாய் அந்த மொபைல் போனை பார்த்தவுடன் எதற்கு இந்த போன் என்று கேட்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தாய்க்கு பிறந்தநாள் பரிசாக மொபைல் போன் வாங்கி கொடுத்த மகனின் இந்த வீடியோ பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Adhula Irundha Mobile-oda Velai Verum 8800 Rs Dhan...! Aana Enga Amma Patta Sandhoshathuku Velayae Kidayaadhu ❤️ Birthday Gift..! pic.twitter.com/4QZJE7Ocii
— Vignesh (@VigneshSammu) January 5, 2022
இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக நடிகர் மாதவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “இந்த மகிழ்ச்சிக்கு விலை இல்லை” எனக் கூறி இந்த வீடியோ பதிவை ரீட்வீட் செய்துள்ளார். அதன்பின்னர் இந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது. தாய்க்கு மகன் கொடுத்த பாசமான பிறந்தநாள் பரிசு தொடர்பாக பலரும் தங்களுடைய நெகிழ்ச்சியான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த மகிழ்ச்சிக்கு விலை இல்லை❤️❤️🙏🙏 https://t.co/qtUksHYSb8
— Ranganathan Madhavan (@ActorMadhavan) January 7, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ‛ஞாபகம் இருக்கா... அந்த ஞாயிறு... முதல் லாக்டவுன் போட்ட ஞாயிறு’ தமிழ்நாடு ஊரடங்கு ஒரு பிளாஷ் பேக்!