‛ஞாபகம் இருக்கா... அந்த ஞாயிறு... முதல் லாக்டவுன் போட்ட ஞாயிறு’ தமிழ்நாடு ஊரடங்கு ஒரு பிளாஷ் பேக்!
கொரோனா பரவல் தொடங்கி இரண்டரை வருடங்கள் ஆன நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் இன்னமும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அது போலவே நமது நாட்டிலும் பல மாநிலங்களில் தற்போது அமல்படுத்ததப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தொற்றின் வேகம், அடுத்து எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தாலும், பல பிரச்சனைகளையும் அளிக்கிறது.
இதற்கு முன்னதாக விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த போது, வர்த்தகச் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக நுகர்வோர் சார்ந்த சாலையோர வியாபாரிகள், சிறு கடைகள் ஆகியவற்றின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.
மேலும் விடுமுறை நாட்களில் பொதுவாகவே போக்குவரத்துத் துறை மிகவும் பிசியாக இருக்கும், ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட முழு ஊரடங்கால் இந்த துறையில் இருக்கும் ஊழியர்கள், வாகன ஒட்டிகளின் வருமானம் பாதித்தது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது வழக்கத்தை வீட அதிகமாக இருக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகம், டெலிவரி செய்வோரின் வருமானமும் பாதிததது. மேலும் பொழுது போக்கு சார்ந்த அனைத்து பிரிவுகளும் ஊரடங்கால் பாதிக்கட்ப்பட்டது. மேலும் Flipkart, Amazon டெலிவரியும் பாதிப்பு ஏற்பட்டது.
முந்தைய ஊரடங்கால் நாட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் சந்தித்த பொருளாதார நெருக்கடி ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. ஏழைகளும், நடுத்தர மக்களும், இளைஞர்களும் தாங்கள் கடினமான நேரத்தை எதிர்கொண்டனர். குறைந்த வேலைவாய்ப்பு, வெளியே செல்ல முடியாமல் இருந்தது மற்றும் கல்வி தடைபட்டது ஆகியவை இளைஞர்கள் பாதிப்பு அடைந்தனர்.
தியேட்டர், விளையாட்டு மைதானம், மால் போன்ற அனைத்து பொழுது போக்கு பிரிவுகளும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு காரணமமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனால் பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் சரியாக வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை.
ஊரடங்கால் மக்கள் கொரோனாவுக்கு பயந்து மனநலம் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்தனர்.
நீண்டகாலத்திற்கு வீட்டிற்குள் இருந்துவிட்டு, வெளி உலகை காணாமல் மன குழப்பத்தில் பலர் பாதிக்கப்பட்டதுண்டு.
முன்னதாக ஊரடங்குகளால் மக்களுக்கு பல விதமான மனநலப் பாதிப்புகளை ஏற்பட்டது. இந்த நெருக்கடி காலத்தில் மக்களிடையே அச்சம், பீதி, பதட்டம், சோகம், கவலை, வெறுமை, வெறுப்பு, தனிமை, பயம், குழப்பம், கோபம், விரக்தி, உளைச்சல், வருத்தம் போன்ற பல விதமான உணர்வுகளாய் எதிர்கொண்டனர். இந்த அனைத்தும் சேர்ந்து மன அழுத்தத்தை பலருக்கும் ஏற்படுத்தியது.
ஒருவருக்கு உடல்நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மன நலமும் முக்கியமானதாகும் உடல்நலப் பிச்சினைகள் மன நலத்தைப் பாதிக்கும்; மனநலக் கோளாறுகள் உடல் நிலையைப் பாதிக்கும். எனவே மனம்-உடல் இரண்டின் சமநிலைதான் ஆரோக்கியமாகக் கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )