”இரண்டு இந்தியா” விவகாரம் : சர்ச்சையில் நகைச்சுவைக் கலைஞர் வீர்தாஸ்
அமெரிக்காவின் கென்னடி செண்டரில் அண்மையில் இரண்டு இந்தியா என்கிற பார்வையில் ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ ஒன்றை நிகழ்த்தினார் வீர்தாஸ்.
தனது நெட்ஃபிளிக்ஸ் சீரிஸுக்காக எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் அமெரிக்க வாழ் இந்தியரான வீர்தாஸ். இவர் அண்மையில் இந்தியா குறித்து பதிவு செய்த கருத்து பல்வேறு நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
அமெரிக்காவின் கென்னடி செண்டரில் அண்மையில் இரண்டு இந்தியா என்கிற பார்வையில் ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ ஒன்றை நிகழ்த்தினார் வீர்தாஸ். அதில் இந்தியாவை முன்வைத்து அவர் சொன்ன கருத்துகள் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளன. ‘எங்கள் இந்தியாவில் 30 வயதுக்குட்பட்ட்வர்கள்தான் அதிகமாகப் பணியாற்றுகிறார்கள்.ஆனால் அவர்கள் 75 வயது பழமையான தலைவரின் 150 வருடப் பழமையான யோசனைகளைப் பின்பற்றுகிறார்கள். எங்கள் இந்தியாவில் பகலில் பெண்களை வணங்குவோம் இரவில் அவர்களைக் கூட்டுப் பாலியல் வன்முறை செய்வோம்’ என அவர் பேசினார். அவர் பகடியாகச் சொன்ன இந்த கருத்துகள் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் பதிவு செய்துள்ளனர்.
View this post on Instagram
அவரது லவ் லெட்டர் டு இந்தியா என்கிற நெட்பிளிக்ஸ் சீரிஸுக்காகத்தான அவர் எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். தான் காமெடி எழுதும்வரை இந்தியாவுக்காக தொடர்ந்து எழுதுவதை நிறுத்தப்போவதில்லை என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.