என்னது விஜய்யின் 10 படங்களுக்கு ‘NO’ ஆ? - ஹாரிஸ் ஜெயராஜ் சொன்னது என்ன?
ஏ.ஆர் ரஹ்மான் ரசிகர்கள் மற்றும் இளையராஜா ரசிகர்கள் மோதி கொண்டிருக்க, இதில் சாந்தமாக இருப்பவர்கள் ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்கள்
கெளதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ்
2000 முதல் 2015 வரை ஹாரிஸ் இசையமைத்த பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர்
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் விஜய்யின் 10 படங்களுக்குத் தொடர்ந்து நோ சொன்னதாக அவர் தெரிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது
விஜய் தனக்கு ஒவ்வொரு படைத்திருக்கும் ஃபோன் செய்வாராம். யூத் , சச்சின் , காவலன் , வேலாயுதம் என தொடர்ந்து 10 படத்திற்கு நோ சொல்லி இருக்கிறாராம்
இதைக் குறித்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், என்னால் அதிக அழுத்தத்தை எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு படம் செய்தாலும் முழு மனதுடன் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பேன் என்றார்
அடுத்து 11 வது படமாக நண்பன் எனக்கு சரியான படமாக தோன்றியது என்றார். அதன் பின் துப்பாக்கி படத்தில் அவரை பாடவைத்தேன் என்றார் ஹாரிஸ்
சமீப காலங்களில் ஹாரிஸ் ஜெயராஜ் ஃபார்ம் அவுட் ஆகி இருந்தாலும் மறுபடியும் கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.