மேலும் அறிய

Keerthy Suresh: யாருப்பா அந்த ஆண்டனி தட்டில்? நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் திருமணமா? வலைவீசி தேடும் ரசிகர்கள்

Keerthy Suresh Marriage: நடிகை கீர்த்தி சுரேஷ் வரும் டிசம்பர் மாதம் தனது நீண்டநாள் காதலரை, திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Keerthy Suresh Marriage: நடிகை கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் எனும் நபரை தான் காதலித்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கீர்த்தி சுரேஷிற்கு திருமணம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷு தனது நீண்ட நாள் காதலனை அடுத்த மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷ்-க்கும் அவரது நீண்ட நாள் காதலருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளது. திருமணம் மிக எளிமையாகவும் அதைதொடர்ந்து, பிரமாண்ட வரவேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து தான், கீர்த்தி சுரேஷ் செய்துகொள்ளவிருக்கும், அந்த நபர் யார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வலைசீசி தேட தொடங்கியுள்ளனர்.

யார் அந்த ஆண்டனி தட்டில்?

கொச்சியில் பள்ளி பருவத்தில் தன்னுடன் சேர்ந்து பயின்ற ஆண்டனி தட்டில் என்பவரை தான் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், பெற்றோர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்ய இருப்பதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டனி துபாயை மையமாக கொண்ட தற்போது பிஸினஸ் செய்து வருவதாகவும், கொச்சியில் பள்ளி படிப்பின்போது மலந்த காதல் 15 ஆண்டுகளை கடந்து தற்போது திருமணத்தை எட்டியுள்ளதாகவும் தெரிகிறது. இவரைப்பற்றிய கூடுதல் தகவல்கள், கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே தெரிய வரும்.

கீர்த்தி சுரேஷும், வதந்திகளும்:

கீர்த்தி சுரேஷின் திருமணம் தொடர்பான தகவல்கள் வெளியாவது இது முதல்முறையல்ல. இசையமைப்பாளர் அனிருத்தை அவர் காதலித்து வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால், அவை அனைத்தும் வெறும் வதந்திகள் மட்டுமே என, கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்தே விளக்கமளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷின் திரைப்பயணம்:

கேரளாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர், கடந்த 2000ம் ஆண்டு வெளியான பைலட்ஸ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இதையடுத்து, கடந்த 2015 இல் வெளியான இது என்ன மாயம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து, ரஜினி முருகன், நடிகையர் திலகம், சர்கார், அண்ணாத்த என பல படங்களில் நடித்துள்ளார். நடிகையர் திலகம் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்று கவனம் ஈர்த்தார். இதனால் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆன பல படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.  'ஜவான்' படம் மூலம் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் அட்லீ அடுத்ததாக தெறி படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்துள்ளார்.  அப்படி தயாராகியுள்ள பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகிறார். தொடர்ந்து பிசியாக நடிப்பதற்கு கைவசம் நிறையபடங்கள் வைத்துள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ALSO READ | Mens Day 2024 Wishes: சர்வதேச ஆண்கள் தினம்; அன்பிற்குரிய ஆண்களுக்கு வாழ்த்து அனுப்ப மெசேஜ்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget