Ravi Mohan: ரவி மோகன் கெனிஷா பழகியது எப்படி...நட்பு காதலாக மாறியது எப்போது?
நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் இடையில் பழக்கம் ஏற்பட்டது எப்படி? கெனிஷா யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். கடந்த சில மாதங்களாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இவரும், இவரின் மனைவி ஆர்த்தியும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வருகின்றனர். ஆர்த்தியும் சாதாரண வீட்டு பெண் இல்லை. பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள்.
ஆர்த்தி மிகவும் வசதியான வீட்டு பெண் என்பதாலேயே... ஆரம்பத்தில் ரவி மோகனின் காதலுக்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. பிறகு ரவி மோகனின் பிடிவாதம் பெற்றோரை சம்மதிக்க வைத்து. இதை தொடர்ந்து இவர்களுக்கு 2009-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தற்போது ஆர்த்தி - ரவி மோகன் ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 15 வருடங்களுக்கு மேல் பலரும் பொறாமை கொள்ளும் வகையில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த, ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு இடையில் கடந்த ஒரு வருடங்களாகவே பல்வேறு கருத்து வேறுபாடுகளும், பிரச்சனைகளும் ஏற்பட்ட நிலையில், இதனை இரு குடும்பத்தினரும் சேர்ந்து... சரி செய்ய முயற்சி செய்தனர்.
ரவி மோகன் குடும்பத்தினர் அவருக்கு ஆதரவாக பேசிய நிலையில், இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் கை மீறி விவாகரத்தில் வந்து நின்றுள்ளது. இந்த நிலையில் தான் ரவி மோகன் திடீரென்று தனது மனைவியை பிரிவதாக அறிவித்து, விவாகரத்து கோரி நீதிமன்றம் வரை சென்றார். இப்போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த ரவி மோகன் தனது அறிக்கையில் குடும்பத்தின் நலன் கருதி இந்த முடிவு எடுப்பதாக அறிவித்தார்.
மேலும் தன்னிடம் பணம் இல்லை என்றும், வங்கி கணக்கு, ஏடிஎம் கார்டு எல்லாமே தனது மனைவியிடம் தான் இருக்கிறது என்றும் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு விளக்கம் கொடுத்த ஆர்த்தி தன் பங்கிற்கு அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தினார்.
இன்னும் விவகாரத்தே ஆகாத நிலையில், நேற்று சென்னை ஈ சி ஆரில் நடந்த திருமணத்தில், ரவி மோகன்... ஏற்கனவே இவருடன் இணைத்து பேசப்பட்ட பாடகி கேனிஷாவுடன் வந்திருந்தார். இருவரும் மேட்சிங் மேட்சிங் உடையில் வந்திருந்ததை பார்த்து... மீடியாக்கள் இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் தற்போது ரவி மோகனை ஆட்டி வைக்கும் அந்த கெனிஷா யார்... எப்படி இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது என்பது பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

அதாவது, ஷூட்டிங் இல்லாத நாட்களில் ரவி மோகன் தனது நண்பர்களுடன் இணைந்து கோவா டிரிப் செல்வதாக வழக்கமாக வைத்துள்ளார். இப்படி ட்ரிப் போகும் பல நேரங்களில் தன்னுடைய மனைவியை அழைத்து செல்ல மாட்டாராம். அப்படி அவர்கள் சென்ற ஒரு பயணத்தின் போது தான் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர். கெனிஷா பிரான்சிஸ் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் கோவாவில் உள்ள பப்புகளில் ரூ.2000-திற்கு பாடல்கள் பாடி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவரது சம்பளம் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இல்லை.
அப்படிதான் கோவாவில் உள்ள பப்பில் பாடும் போது. ரவி மோகனுக்கு கெனிஷாவின் குரல் வளம் பிடித்து போக அதை அவரிடம் நேரடியாக கூறியபோது இருவருக்கும் நட்பு ஏற்பட... இந்த பழக்கம் தொடர்ந்துள்ளது.
கெனிஷா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில், நடிகர் ஜீவாவின் ஆல்பம் ஒன்றில் கூட பாடும் வாய்ப்பை பெற்றார்.
ஆர்த்திக்கு தெரியாமல் இருந்த இவர்களின் பேச்சுவார்த்தை தெரிய வரவே தான் ரவி மோகன் வாழ்க்கையில் பூகம்பம் வெடித்துள்ளது. ஒரு முறை, ரவி மோகன் கோவாவில் கெனிஷாவோடு கூத்தடிப்பது குறித்து தெரியவர, ஆர்த்தியும் கோவா சென்று ஜெயம் ரவி எப்போதும் தாங்கும் ஹோட்டலை சோதனை இட்டபோது அவர் அங்கு இல்லாதது தெரியவந்தது. ஒவ்வொரு ஆண்டு திருமண நாளை மனைவியுடன் கொண்டாடி வந்த ரவி மோகன் கெனிஷாவின் பழக்கத்திற்கு பிறகு அவருடன் திருமண நாளை கொண்டாட தவிர்த்து வந்தார். 
மேலும், திருமண நாளன்று ஷூட் இருப்பதாக கூறி கோவா சென்றுள்ளார். அப்படி சென்ற இடத்தில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் காரில் சென்றுள்ளனர். அந்த காரை கெனிஷா ஓட்டியிருக்கிறார். அதிவேகமாக ஓட்டியதற்காக அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான குறுஞ்செய்தி ஆர்த்தியின் செல்போனுக்கு வரவே... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற ஆர்த்தி, ரவி மோகன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கினார்.
அதன் பிறகு குடும்பத்திற்குள் கெனிஷா விவகாரம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். ரவி மோகனின் பெற்றோரும், மோகன் ராஜாவும் இருவரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சி செய்துள்ளனர். ஆனால், எந்தப் பலனும் இல்லை.
ரவி மோகன் தற்போது முழுக்க முழுக்க கெனிஷாவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒரே கலரில் உடை அணிந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டும் இன்றி கணவன் - மனைவி போல ஒரே காரில் வந்து சென்றனர். மேலும் ரவி மோகன் கையை பிடித்து கெனிஷாவை அழைத்து சென்று போட்டோ ஷூட் ஷூட் நடத்திய கூத்தும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.




















