போதை மருந்து வழக்கில் கைது; கிருஷ்ணாவுக்கு இரத்த பரிசோதனையில் நெகடிவ் வந்தது எப்படி? பிரபலம் கூறிய தகவல்!
போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவின் ரத்த பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது எப்படி ? என சுசித்ரா கூறிய தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, சினிமா துறையில் போதை மருந்து கலாச்சாரம் உலாவி வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தவர் பாடகி சுசித்ரா. ஆனால் அப்போது சுசித்ரா பேச்சு, சமூக வலைதளங்களில் எடுபடவில்லை. போதையில் அவர் உளறி வருவதாகவே அவரை பலர் சாடி வந்தனர். அதேபோல் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும் போதை பொருள் பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.
கார்த்திக் குமார் தன்னுடைய ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளில், போதை மருந்தை உட்கொள்ளாமல் அனைவர் மத்தியிலும் நின்று பேச மாட்டார் என்றும், அப்போதைக்கு சில பேட்டிகளில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சுசி சொன்ன பிரபலங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது. மூன்றெழுத்து நடிகர், மூன்றெழுத்து நடிகை, ஒல்லிபிச்சான் இசையமைப்பாளர், என பலர் மீது சுசித்ரா தன்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆனால் அந்த சமயத்தில் சுசித்ரா மீது போதை மருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்காக அவரிடம் முறையாக விசாரணை நடைபெற்ற நிலையில், அவரும் அனைத்திற்கும் ஒத்துழைத்ததாகவும்... தனக்கு எந்த ஒரு போதைப்பொருள் பழக்கமும் இல்லை. போதைப்பொருள் டீலிங்கும் இல்லை என்பதை போலீசாரே உறுதி செய்து, தனக்கு அனுப்பிய மெயில் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார் .
தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் போதை மருந்து சர்ச்சை தலை தூக்கி உள்ளதால், சுசித்ரா இது குறித்து பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறா.ர் அந்த வகையில் தற்போது நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரஷாந்த், டீலர் பிரதீ,ப் மற்றும் டீலர் கெவின், ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பத்து பிரபலங்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில பிரபலங்கள் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளதாகவும் அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.
போதை மருந்து வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த் தான் போதை மருந்து எடுத்துக் கொண்டதை ஒப்புக்கொண்ட நிலையில், அவருடைய ரத்த பரிசோதனையிலும் அவர் கொக்கேன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதே நேரம் நடிகர் கிருஷ்ணா போதை மருந்தை, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டதாக போலீசார் அவருடைய குறுஞ்செய்திகள் மற்றும் கோட் வேர்ட் மூலம் உறுதி செய்ததாக கூறியிருந்தாலும், அவருடைய ரத்த பரிசோதனைகள் நெகட்டிவ் என வந்துள்ளது. இதையே ஆதாரமாகக் கொண்டு தற்போது கிருஷ்ணா ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்துள்ளார் .

ரத்த பரிசோதனையில் கிருஷ்ணாவுக்கு நெகட்டிவ் என வந்தது எப்படி என்று அண்மையில் கொடுத்த பேட்டியில் சுசித்ராவிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியதற்கு, கேரளாவில் சில ஆயுர்வேத மூலிகைகளை கொண்டு செய்யப்படும் டிரீட்மென்ட் காரணமாக அவர்கள் உடலில் உள்ள போதை மருந்து மூலக்கூறுகள் அனைத்தும் வெளியேறிவிடும். இதன் காரணமாக அவர்கள் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டுவிடும். இதன் காரணமாகவே, ரத்த பரிசோதனையில் நெகட்டிவ் என வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் .
நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பியதும், அவர் செல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு கேரளாவுக்கு தப்பி ஓடியதாக கூறப்பட்ட நிலையில், 2 நாட்களுக்கு பின்னர் அவரே நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னுடைய வக்கீலுடன் வந்து விசாரணைக்கு ஆஜரானார். இதையெல்லாம் கூட்டி... கழித்து பார்க்கும் போது எங்கோ இடிக்கிறது என நெட்டிசன்களும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.






















