மேலும் அறிய

Vijayakanth: விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக இதுதான் காரணமா? - வெளியான புதிய தகவல்

Vijayakanth: ராமாபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல்நிலை தற்போது சீராக இல்லை என்பதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Vijayakanth: கழுத்து எலும்பு தேய்மானமே விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு காரணம் என அவரது நண்பர்கள் கூறியுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
 
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ” விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை நீராக இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிரது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என கூறப்பட்டிருந்தது. 
 
இதனால் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருவதாக சினிமா பிரபலங்களும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாதது குறித்து அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
அதில் “ தற்போது விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை. அவரால் அரை மணி நேரத்திற்கு மேல் இருக்கையில் அமர்ந்திருக்க முடியாமல் இருந்தது. தற்போது அது கூட முடியவில்லை. விஜயகாந்திற்கு முதுகு தண்டு பிரச்சனை சரியாகவில்லை. கழுத்தோடு இணையும் முதுகுத் தண்டு தேய்மானம் ஏற்பட்டு விட்டதால், ஞாபக சக்தி குறைபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அவரை சந்திப்பதில்லை. இந்த நிலையில் அவரால் மூச்சு விட முடியாமல் போனது.
 
தற்போது நிலவும் கால நிலையால் விஜயகாந்த் மூச்சு விடமுடியாததால், செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு தரப்பில் எந்த உதவி வேண்டுமானாலும் வழங்க தயாராக இருப்பதாக பிரேமலதா விஜயகாந்திடம் கூறப்பட்டுள்ளது. விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாததால் அவர் மேலும் சில நாட்கள் சிகிச்சையில் இருக்கலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கிடையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படியான நிலையில் தான் விஜயகாந்தின் சுவாச பிரச்சனைக்கு டிரக்கியஸ்டமி சிகிச்சை அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. கடந்த நவம்பர் 18ம் தேதி போரூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த தகவல் அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget