Manjot Singh : கட்டிடத்தில் இருந்து குதித்த பெண்ணை காப்பாற்றிய அனிமல் பட நடிகர்... வைரலாகும் மஞ்சோத் சிங்கின் சாகசம்
தற்கொலைக்கு முயன்ற பெண்ணை அனிமல் படத்தில் நடித்த மஞ்சோத் சிங் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
தற்கொலைக்கு முயன்று மாடியில் இருந்து குதிக்கும் பெண்ணை அனிமல் படத்தில் நடித்த நடிகர் மஞ்சோத் சிங் காப்பாற்றிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அனிமல்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பிர் கபூர் நடித்த படம் அனிமல் கடந்த ஆண்டு வெளியானது . ராஷ்மிகா மந்தனா, பாபி தியோ, அனில் கபூர் , மஞ்சோத் சிங், பப்லு ப்ரித்விராஜ் , த்ரிப்தி டிம்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதோது வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. உலகளவில் ரூ 1000 கோடி வசூல் செய்தது அனிமல் படம். அனிமல் படத்தில் ரன்பிர் கபூரில் சகோதரர்களில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகர் மஞ்சோத் சிங். இந்தப் படத்தில் இடம்பெற்ற பஞ்சாபி பாடல் ஒன்றின் மூலம் மஞ்சோத் பரவலாக அறியப்பட்டார் . ஆனால் நடிகராக அறியப்படுவதற்கு முன் மஞ்சோத் இணையதளத்தில் பிரபலாக இருந்துள்ளார்.
பெண்ணைக் காப்பாற்றி சாகசம்
Kudos! to brave #Sikh Manjot Singh Royal R/o Jammu who saved the life of a girl in his Sharda University Greater Noida. The girl was trying to commit suicide by jumping from the building. pic.twitter.com/O05u72FIwl
— ®️aminder (Author Immaculate Thoughts) (@ramindersays) August 4, 2019
மஞ்சோத் சிங் நோய்டாவில் உள்ள ஷ்ரத்தா பல்கலைகழகத்தில் பி டெக் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அவரது கல்லூரியில் நடந்த சம்பவம் ஒன்று அவரை இணையதளத்தில் பிரபலமாக்கியுள்ளது. அந்த கல்லூரியில் இருந்த பெண் ஒருவர் தனது அம்மாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் கல்லூரி வளாகத்தின் மாடியில் ஏறி நின்று தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். தனது அருகில் யாராவது வந்தால் தான் குதித்துவிடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார். அப்போது அவரிடம் பேச்சுக் கொடுத்த மஞ்சோத் சிங் அவரை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி மிகச்சரியாக அந்த பெண் கீழே குதிக்கும் போது அவரை தாவிப் பிடித்து காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவர் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். மஞ்சோத் சிங்கின் இந்த வீடியோ இணையதளத்தில் பரவலாக பார்க்கப் பட்டது.
அவரை பாராட்டும் வகையில் டெல்லி சீக்கியர்கள் சமுதாய அமைப்பு ஒன்று மஞ்சோத் சிங்கின் ஐ.ஏ எஸ் படிப்பிற்கான செலவுகளை கட்டும் பொறுப்புகளை எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது.
Manjot Singh,23 yo boy doing https://t.co/9mkcPjvFIS saved life of girl who was attempting suicide in Sharda univ.Manjot do part time job as Bhangra coach to pay his fees. A group of sikh leaders promised to pay his coaching fees for civil services exam. pic.twitter.com/BjjhjIbYmA
— Arshdeep (@arsh_kaur7) August 3, 2019
மேலும் படிக்க : Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் படம் மீண்டும் ரிலீஸாகுது.. இந்தத் தியேட்டர்களில் அனுமதி இலவசம் மக்களே..