Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் படம் மீண்டும் ரிலீஸாகுது.. இந்தத் தியேட்டர்களில் அனுமதி இலவசம் மக்களே..
திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத , யாராலும் வெறுக்க முடியாத நபராக திகழ்ந்தார் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த மறைவுற்ற நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிலையில் திரைப்படம் ஒன்று ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த பல ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனிடையே கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 28 ஆம் தேதி காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் விஜயகாந்த் மறைவை தங்கள் வீட்டு இழப்பாக கருதி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத , யாராலும் வெறுக்க முடியாத நபராக திகழ்ந்தார் விஜயகாந்த். இன்று தமிழ் திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலர் வாய்ப்பு தேடி அலைந்தபோது அவர்களுக்கு சாப்பாடு போட்டு அரவணைத்தார். மேலும் சின்ன நடிகர், பெரிய நடிகர் என எந்த ஈகோவும் இல்லாமல் பழகக்கூடிய கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மதுரை நாகமலை புதுக்கோட்டை சினிமா விநியோகஸ்தர் காசி பிலிம்ஸ் நிறைய விஜயகாந்த் படங்களை வெளியிட்டவர்.
— டீ (@teakkadai1) January 6, 2024
அவர் தற்போது இல்லை. அவரது மகன் இந்த தியேட்டரை நடத்தி வருகிறார். விஜயகாந்த் நினைவாக நேற்றில் இருந்து படம் பொதுமக்களுக்கு கட்டணம் இல்லாமல் திரையிடப்படுகிறது.
எம்ஜிஆர் இறந்தபோது கூட… pic.twitter.com/9vGFQlman2
இதனிடையே விஜயகாந்த் நினைவிடத்துக்கு ஏராளமான பிரபலங்கள், பொதுமக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் விஜயகாந்தின் படம் ஒன்று தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அது 2006 ஆம் ஆண்டுஉதயன் இயக்கியத்தில் உருவான ‘பேரரசு’ படம் தான். இந்த படத்தில் விஜயகாந்த் , டெபினா பொன்னர்ஜி , பிரகாஷ் ராஜ் , சரத் பாபு , ஆனந்தராஜ் , பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.பிரவீன் மணி இசையமைத்திருந்தார். தனது ஐகானிக் கேரக்டரான போலீஸ் கேரக்டரில் தான் இந்த படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இரட்டை வேடத்தில் நடித்த இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் மதுரை நாகமலை காசி தியேட்டரில் விஜயகாந்த் நடித்த பல படங்கள் திரையிடப்பட்டது. இந்த தியேட்டரில் விஜயகாந்த் மறைவையிட்டு அவரது நினைவாக பேரரசு படம் பொதுமக்களுக்கு கட்டணம் இல்லாமல் திரையிடப்படுகிறது. தினமும் 4 காட்சிகள் வெளியிட்டு இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. கிட்டதட்ட 150 படங்கள் நடித்துள்ள விஜயகாந்தின் மற்ற சூப்பர்ஹிட் படங்களையும் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் படிக்க: Ayalaan Vs Captain Miller: கேப்டன் மில்லருக்கு சவால்விடும் அயலான்.. தனுஷை பின்னுக்கு தள்ளினாரா சிவகார்த்திகேயன்?