Watch Video: டார்ஜிலிங்கில் 'மகான்' மகன்… பட வெளியீட்டுக்கு முன், 'சில்' செய்யும் துருவ் விக்ரம்…
மகான் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளதால், 'சில்' செய்வதற்காக சில்லென்று டார்ஜிலிங் சென்றிருக்கிறார் என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்!
அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மாவில் நடிகராக துருவ் விக்ரம் அறிமுகமானார். படம் சரியாகப் போகவில்லை. அடுத்து தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படம் முடிந்து சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கியுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது. டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியா பேனரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், விக்ரமின் 60 வது படமாகும்.
2019 ல் கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த எந்த படமும் வெளிவரவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரவுள்ள விக்ரம் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் என வரிசையாக விக்ரம் படங்கள் ரிலீசிற்காக காத்திருந்தாலும் மகான் படம், தந்தை - மகன் காம்போவில் உருவாகும் முதல் படம் என்பதால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி உள்ளது. இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத், தீபக் பரமேஸ்வர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கேரக்டர்களின் பெயர்கள் அடங்கிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
View this post on Instagram
மகான் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், பிப்ரவரி 10ம் தேதி, அமேசான் பிரைம் வீடியோவில் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கையில், இன்று துருவ் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வைரலாகி உள்ளது. துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மலையில் இருந்து அழகான காட்சியை பார்ப்பது போன்ற ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ரீல்ஸ்-ற்கு பின்னணி இசையாக "நோ யூவர்செல்ஃப்" என்னும் பாடலை இணைந்துள்ளார். இந்த விடியோவிற்கு கீழே லொகேஷனில் டார்ஜிலிங் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மகான் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளதால், 'சில்' செய்வதற்காக சில்லென்று டார்ஜிலிங் சென்றிருக்கிறார் என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்!