Watch Video: 9 மாத கர்ப்பிணியாய் அமலா பால் க்யூட் நடனம்.. சுற்றிப்போடச் சொல்லும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ!
Amala Paul Baby: 9 மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்தபடி நடிகை அமலா பால் நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
அமலா பால்
நடிகை அமலா பால் (Amala Paul) தனது முதல் குழந்தையை இன்னும் சில நாட்களில் வரவேற்க இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் ஜெகத் தேசாய் என்பவருடனான தனது காதலை பொதுவெளியில் வெளிப்படுத்தினார் . இதனைத் தொடர்ந்து அடுத்த மாதத்தில் அவரை கேரள கோயிலில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தான் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
அமலா பால் முதல் திருமணம்
இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்த அமலா பால் அவரை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் காரணமாக இந்த திருமணத்தில் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு வெளியேறினார். இந்த நிகழ்வு அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரைவாழ்க்கையிலும் வெளிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அமலா பால் சோலோவாக நிறைய படங்களில் நடிக்கத் தொடங்கினார். விவாகரத்திற்கு பிறகு பல்வேறு அவதூறுகள் அவர் மீது சுமத்தப்பட்டபோதிலும் எதையும் கண்டுகொள்ளாமல் நடிப்பு , பல்வேறு நாடுகளுக்கு பயணம் என தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடர்ந்தார்.
வயிற்றில் குழந்தையுடன் அமலா பால் நடனம்
தற்போது 9 மாத கால குழந்தையை கருவில் சுமந்து மகிழ்ந்திருக்கும் அமலா பால், தொடர்ந்து ஆன்மிகப் பயணம், பேபி மூன் பயணம் என தன் கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் செலவழித்து புகைப்படங்கள் பகிர்ந்து ரசிகர்களுடன் இணையத்தில் உரையாடி வருகிறார். தனது கணவருடன் வீட்டிற்கு உள்ளே வெளியே என தன் வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். அமலா பாலுக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததாக கடந்த சில நாட்கள் முன்பாக சமூக வலைதளத்தில் வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து இந்த தகவல் பொய் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
View this post on Instagram
தற்போது அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். புகழ்பெற்ற பாப் பாடகியான செலினா கோமெஸின் காம் டவுன் பாடலுக்கு வயிற்றில் இருக்கும் தனது குழந்தையுடம் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : Haraa Box Office: ராமராஜனை பின்னுக்குத் தள்ளிய மோகன்...ஹரா பட பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!