Watch Video | "ஸ்ரீ ராமஜெயம்! மாஷா அல்லா!" நெகட்டிவ் கமெண்ட்டுகளை துவம்சம் செய்த காதல்.. மணிமேகலை - ஹுசைன் பகிர்ந்த வீடியோ
சின்னத்திரை பிரபலம் நடிகை மணிமேகலை - ஹூசைன் தம்பதியினருக்கு இன்று நான்காவது ஆண்டு திருமணநாள்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை மணிமேகலை. நிகழ்ச்சித் தொகுப்பாளராக சன் மியூசிக் தொலைக்காட்சியில் தன் பணியைத் தொடங்கிய மணிமேகலை சன் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார். சமீபகாலமாக விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
மணிமேகலை கடந்த 2017-ஆம் ஆண்டு ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்து மதத்தைச் சேர்ந்த மணிமேகலை, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஹூசைனை காதலித்து, இதே டிசம்பர் 6-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அப்போது, அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தபோது, அவர்களது திருமண வாழ்க்கை குறித்தும் பல்வேறு நபர்களும் மோசமாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களை தெரிவித்தனர்.
View this post on Instagram
இந்தநிலையில், மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று நான்காம் ஆண்டு திருமண நாள் என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் ஹூசைனை திருமணம் செய்த வீடியோவையும், அப்போது சமூக வலைதளங்களில் தான் எதிர்கொண்ட விமர்சனங்களையும் இணைத்து, அனைத்தையும் தாண்டி தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாக உள்ளது. மணிமேகலையின் இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அந்த வீடியோவிற்கு மேல் “எனக்கு தெரியும். நான் எப்போதும் சரியானதையே தேர்வு செய்வேன். கடவுள் என்னை எப்போதும் ஆசிர்வதிப்பார் எனது சிறந்த வாழ்விற்காக. மகிழ்ச்சியான திருமண நாள் செல்லக்குட்டி. ஐ லவ் யூ. ஸ்ரீராம ஜெயம். மாஷா அல்லா” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். 28 வயதான மணிமேகலை திருப்பூரில் பிறந்தவர். தனது முதுகலை படிப்பை சென்னையில் பயின்ற அவர், நடிப்பின்மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இணைந்தார். மணிமேகலையும், அவரது கணவரும் இணைந்து நடத்தி வரும் யூ டியூப் தொலைக்காட்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

