VJ Chitra: பெத்த மகளை விட அவனை தானே நம்புனேன்! வீடு சுடுகாடா ஆகிடுச்சே - கதறி அழுத விஜே சித்ராவின் தாய்!
என்னுடைய மகளை விட, அவனை தான் நான் அதிகம் நம்பினேன் என்று விஜே சித்ராவின் தாயார் கண்ணீர் விட்டு, கதறியபடி பேட்டி கொடுத்துள்ளது. ரசிகர்கள் கண்களையே கலங்க செய்துள்ளது.
விஜே சித்ராவின் அம்மா விஜயா கண்ணீர்:
எங்க வீட்டுக்குள்ள எப்போ அவன் வந்தானோ அப்போதே நிம்மதி, சந்தோஷம் எல்லாம் போயி மகளையும், கணவரையும் இழந்துட்டு உட்கார்ந்திருக்கிறேன் என்று விஜே சித்ராவின் அம்மா விஜயா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவியில் பிரபலமான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலமாக அதிகளவில் பிரபலமானவர் விஜே சித்ரா. இந்த தொடர் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஹேம்நாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகிலுள்ள நசரத்பேட்டை ஹோட்டலில் இருந்துவரும் தங்கி இருந்த நிலையில், திடீர் என சித்ரா அந்த ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சித்ராவின் தந்தை தற்கொலை:
எனினும், அவர் குற்றமற்றவர் என்று கூறி, திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டார். ஹேம்நாத் விடுதலையை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், காமராஜ் இன்று காலை தன்னுடைய மகள் சித்ராவின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ரார்வின் தாயார் பேட்டி:
திருவான்மியூரில், சித்ரா பார்த்து பார்த்து கட்டிய வீட்டில் தான் அவரின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சித்ராவை இழந்த அவரின் குடும்பத்துக்கு, காமராஜின் மரணமும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தான், இச்சம்பவம் குறித்து சித்ராவின் தாயார் விஜயா வேதனையுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "எதுவும் என்னிடம் அவர் பேசவில்லை. காலை 4 மணிக்கு கூட அவரை பார்த்தேன். ஆனால், விடிந்த பிறகு இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு இருந்தது ஒரே ஒரு பொண்ணு தான். அவளையும் சாவடிச்சிட்டான். இப்போது என்னுடைய கணவரையும் சாவடிச்சிட்டான். எந்த நேரத்தில் எங்க வீட்டுக்குள்ள வந்தானோ தெரியவில்லையே இப்படி வீட்டையே சுடுகாடா மாத்திட்டு போயிட்டான்.
என்னுடைய மகளை விட நான் அவனைத் தான் முழுவதுமாக நம்பினேன். திருவள்ளூர் நீதிமன்றத்தில் எப்போது அவனை விடுதலை பண்ணாங்களோ அப்போதிலிருந்து என்னுடைய கணவர் சாப்பிடுவதில்லை. நான் தான் அவரை சமாதானம் செய்து சாப்பிட வைத்தேன். ஆனால், இன்றைக்கு இப்படியாகிவிட்டதே என்று கூறி கதறி அழுதுள்ளார். இவரின் ஆதங்கமும் இழப்பின் வலியும் பார்ப்பவர்கள் கண்களையே கலங்க வைத்துள்ளது.