VJ Archana Meets Vairamuthu: வைரமுத்து உடன் வி ஜே அர்ச்சனா; உஷார் என்று எச்சரித்த சின்மயி..வைரலாகும் பதிவு!
Chinmayi: சின்னத்திரை நடிகை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா, பாடலாசிரியர் வைரமுத்துவுடன் எடுத்த புகைப்பட பதிவிற்கு பாடகி சின்மயி செய்துள்ள கமெண்ட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ள, பின்னணி பாடகி சின்மயி. இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து தன்னிடம் பாலியல் சீண்டலுக்கு முயற்ச்சி செய்ததாகக் கூறி குற்றம் சாட்டினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தில் நேரும் போதெல்லாம் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் பாடகி சின்மயி. 2018ஆம் ஆண்டில், பெயர் வெளியிடப்படாத ஒரு பெண்ணை வைரமுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு பதிவை வெளியிட்டுருந்தார்.
இதற்கு ஆதரவு தெரிவித்த பின்னணி பாடகி சின்மயி, தன்னையும் வைரமுத்து பாலியல் சீண்டல் செய்ய முயற்சி செய்ததாக குற்றம் சாட்டினார். இந்த பிரச்சினை மூலம் தமிழகத்தில் மீ டூ (Me Too) இயக்கம் தலைத் தூக்கத் தொடங்கியது. சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் கொடுத்தனர். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலை வழக்கிற்கு எதிராகக் கூட தனது கருத்துகள் பலவற்றை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டிருந்தார் பாடகி சின்மயி.
விஜே அர்ச்சனாவின் பதிவும்-சின்மயியின் கமெண்டும்
View this post on Instagram
விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்து வருபவர் அர்ச்சனா. இவர், சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார். இவர், சமீபத்தில வைரமுத்துவை சந்தித்ததாக கூறி, அவருடன் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் இடம் பெற்றிருந்த புகைப்படங்களில், வைரமுத்து அர்ச்சனாவை ஆசிர்வதிப்பது போன்ற போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலர் லைக்ஸ் போட்டு “சூப்பர்” என கமெண்ட் செய்தாலும், ஒரு சிலரோ “அவரிடம் கொஞ்சம் உஷாராக இரு, அவர் ஒரு மாதிரியான ஆளு” என கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். அதில், சின்மயியும் ஒருவர்.

விஜே அர்ச்சனாவின் பதிவிற்கு, “இது போலத்தான் அனைத்தும் ஆரம்பிக்கும். தயவு செய்து கவனமாக இருங்கள். அவரை சந்திக்கையில் யாரையேனும் துணைக்கு வைத்திருங்கள், அவரிடமிருந்து சற்று தள்ளியே இருங்கள்” என கமெண்ட் செய்துள்ளார் சின்மயி. இந்த பதிவை வெளியிட்டிருந்த அர்ச்சனா, தனது பதிவில் இடம் பெற்றிருந்த சின்மயியின் கமெண்டை நீக்கியுள்ளார். ஆனால், அதற்கு முன்னரே சின்மயியின் கருத்தை கவனித்த இணையவாசிகள் அதை எடுத்து மீம்ஸ் போட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.





















