Vishnu Vishal - Soori : ”அண்ணா..” மீண்டும் இணைந்த விஷ்ணு விஷால் - சூரி.. என்ன ஆச்சு? சண்டை முடிஞ்சுதா?
Vishnu Vishal - Soori : நடிகர் விஷ்ணு விஷால் - சூரி இடையே இருந்த கருத்து மோதல் தீர்ந்து இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
![Vishnu Vishal - Soori : ”அண்ணா..” மீண்டும் இணைந்த விஷ்ணு விஷால் - சூரி.. என்ன ஆச்சு? சண்டை முடிஞ்சுதா? Vishnu Vishal soori patch up after a conflict latest insta post goes viral online Vishnu Vishal - Soori : ”அண்ணா..” மீண்டும் இணைந்த விஷ்ணு விஷால் - சூரி.. என்ன ஆச்சு? சண்டை முடிஞ்சுதா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/6f4b03487bc7f341ac6c9aab75fd3ca21712668947260224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெண்ணிலா கபடி குழு படத்தில் இணைந்து நடித்ததில் இருந்து நடிகர் விஷ்ணு விஷால் - நடிகர் சூரி இடையே ஒரு நல்ல நட்பு இருந்து வந்தது. அப்படம் விஷ்ணு விஷாலுக்கு நல்ல ஒரு அறிமுக படமாக அமைந்து பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதேபோல அப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடியும் மிகவும் பிரபலம். அதுவரையில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்த சூரிக்கு வெண்ணிலா கபடி குழு படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.
அதை தொடர்ந்து ஏராளமான படங்களில் மெயின் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தற்போது 'விடுதலை' படம் மூலம் ஹீரோ அந்தஸ்தை தன்னுடைய விடாமுயற்சி மற்றும் கடுமையான உழைப்பால் அடைந்துள்ளார்.
விஷ்ணு விஷால் - சூரி கூட்டணியில் குள்ளநரி கூட்டம், ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணைந்து நடித்தனர். அவர்களின் காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான் இவர்கள் இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. அதற்கு காரணமாக விஷ்ணு விஷால் அப்பா முன்னாள் டிஜிபி ரமேஷ்தான் காரணம் என சொல்லப்பட்டது.
சூரிக்கு நிலம் வாங்கித் தருவதாக சொல்லி சுமார் 2.7 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டார் விஷ்ணு விஷால் அப்பா என சூரி அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்த விவகாரம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிது காலம் இந்த பிரச்சினை நீடித்து வந்தது. இடையில் வந்த மூன்றாவது நபர்தான் இதற்கு காரணம் என்ற உண்மை தெரியவந்தது.
View this post on Instagram
தற்போது விஷ்ணு விஷால் - சூரி இடையில் இருந்த கருத்து வேறுபாடு களைந்து இருவரும் சமரசம் செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போட்டோ போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் விஷ்ணு விஷால், அவருடைய அப்பாவுடன் சூரி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து "நேரம் தான் அனைத்துக்கும் பதில்... பாசிட்டிவிட்டி பாயட்டும் சூரி அண்ணா... லவ் யூ அப்பா..." என போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
அவரின் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வரும் வேளையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என அவர்களின் விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)