மேலும் அறிய

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் குறித்து நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பேச்சு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் விஷால் இதுகுறித்து தெரிவித்த கருத்து கவனம் பெற்றுள்ளது. கருத்து சுதந்திரம், அரசியல் விமர்சனம் மற்றும் பொது வாழ்க்கையில் பேசப்படும் வார்த்தைகளின் பொறுப்பு குறித்து அவர் பேசியுள்ள கருத்துகள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.

உதயநிதி கருத்து குறித்து நடிகர் விஷால்

இதுகுறித்து பேசிய விஷால், "கருத்து சுதந்திரத்திற்கு ஒரு எல்லை இருக்கிறது. சில விஷயங்களைத் தவிர்க்கலாம். சில விஷயங்களை பேசக்கூடிய சூழலும் ஏற்படலாம். அதுதான் அரசியல். அரசியலில் ஸ்கிரிப்டாக பேசுவது வேறு, தற்செயலாக பேசுவது வேறு. நான் பேசும் பல விஷயங்களே சிலருக்கு சர்ச்சையாகத் தோன்றும். ஒரு லயோலா கல்லூரி சீனியர், இன்னொரு லயோலா கல்லூரி மாணவரை சிறையில் அடைப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. முதலமைச்சர் குறித்து பேசினால் பிரச்சனைகள் வரலாம். நீங்கள் பேசியது தவறு என்பதால் தான் உங்களை சிறையில் வைத்தார்கள். இதுதான் அரசியல்" என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி கைது பின்னணி

உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை பேரணியில் உரையாற்றியபோது, நடிகை திரிஷா குறித்து எழுந்த கோஷங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தார். அந்தப் பேச்சு முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷாவை அவமதிக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் இருப்பதாகக் கூறி பல்வேறு அமைப்புகள் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, உதயநிதி ஸ்டாலினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. பின்னர் அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

உதயநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நோக்கத்திலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டினர். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மறுபுறம், சட்டத்தை மீறும் வகையில் யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார்களின் அடிப்படையிலும் நீதிமன்ற நடைமுறைகளின்படியும் கைது மேற்கொள்ளப்பட்டதாக ஆளுங்கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் உதயநிதி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அவர் விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சூழலில்தான் நடிகர் விஷாலும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். கருத்து சுதந்திரத்திற்கு எல்லை இருக்கிறது என்றும், அரசியலில் பேசப்படும் வார்த்தைகளுக்கு பொறுப்பு அவசியம் என்றும் அவர் கூறியிருப்பது புதிய அரசியல் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
Embed widget