மேலும் அறிய

சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

'ஷம்பாலா' வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு... சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

'ஷம்பாலா' திரைப்படத்தின் மூலம் தனித்துவமான கற்பனை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது இன்னும் பிரம்மாண்டமான படைப்பான 'கரிகாலா' மூலம் ரசிகர்களை புதிய மாய உலகிற்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இந்த பான் இந்தியா சோஷியோ ஃபேண்டஸி திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் தலைப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

'கரிகாலா' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களை ஒரு பிரம்மாண்டமான கற்பனை உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. அடர்ந்த மர்மக் காட்டில், கையில் வாளை உயர்த்தியபடி வீரராக குதிரையில் சீறிப்பாயும் சந்தீப் கிஷனுடன், அருகில் கர்ஜித்தபடி பாய்ந்து வரும் கம்பீரமான சிங்கமும் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியமைப்பு, இந்திய நாட்டுப்புறக் கதைகள், சாகசம் மற்றும் கற்பனை உலகம் ஆகியவற்றை இணைக்கும் பிரம்மாண்டமான திரைப்பட அனுபவத்திற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் 'கரிகாலா', தலைமுறைகளை கவர்ந்த *சந்தமாமா* கதைகளின் மாய உலகில் இருந்து உத்வேகம் பெற்று உருவாகியுள்ளது. மந்திர சக்திகள், மறக்கப்பட்ட ராஜ்ஜியங்கள், வீரர்கள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் புராண மரபுகள் நிறைந்த இந்த உலகம், இந்திய நாட்டுப்புறக் கதைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து திரையில் உயிர்ப்பிக்கவுள்ளது.

இந்தப் படத்திற்காக சந்தீப் கிஷன் தனது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரம், புதிய தோற்றம் மற்றும் முற்றிலும் மாறுபட்ட உடல் மொழியுடன் சக்திவாய்ந்த போர்வீரராக அவர் திரையில் தோன்றுகிறார். அவரது இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

'கரிகாலா' இரண்டு அத்தியாயங்களாக வெளியாகவுள்ளது. முதல் அத்தியாயம் 2027 ஜூலை 2-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் அத்தியாயம் 2027 அக்டோபர் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஷம்பாலா படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் யுகேந்தர் முனி இந்தப் படத்தை இன்னும் பெரிய அளவில் உருவாக்கி வருகிறார். விரிவான உலகக் கட்டமைப்பு, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ், பிரம்மாண்டமான தயாரிப்பு வடிவமைப்பு, விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்துடன் உருவாகி வரும் 'கரிகாலா', இந்திய சினிமாவில் சோஷியோ ஃபேண்டஸி வகைக்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டமான தலைப்பு அறிவிப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ள நிலையில், 'கரிகாலா' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget