மேலும் அறிய

தமிழ் சினிமாவின் மைல்கல்... ‘விசாரணை’க்கு 10 ஆண்டுகள்; ஒன்று கூடிய படக்குழு !!

தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை படக்குழுவினர் கொண்டாடினர்

தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், ஒரு காலகட்டத்தின் குரலாகவும், சமூக சாட்சியாகவும் மாறிவிடும். அந்த வகையில், 2016ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் இன்று வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  இந்த சிறப்பான தருணத்தை நினைவுகூறும் விதமாக, அப்படத்தின் படக்குழு இயக்குனர் பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் ஒன்று கூடி கலந்துரையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

விசாரணை 10 ஆண்டு கொண்டாட்டம் 

இந்நிகழ்வினில் இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர் சந்திரகுமார், நடிகர் வே.இர.தினேசு, இயக்குனர் & நடிகர் சமுத்திரக்கனி,  கருணாஸ், இயக்குனர் சரவண சுப்பையா, மூணார் ரமேஷ், திலீப் சுப்பராயன், இயக்குநர் தமிழ், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர் 

Wunderbar Films மற்றும் Grass Root Film Company நிறுவனங்களின் தயாரிப்பில் எழுத்தாளர் M சந்திரகுமார் அவர்களின் ”லாக்கப்” புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ”விசாரணை” திரைப்படம்,  போலீஸ் விசாரணை என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், அதிகாரத்தின் கொடூர முகம், அடித்தட்டு மக்களின் வலி – இவை அனைத்தையும் மிக நேர்மையாகவும், தைரியமாகவும் திரையில் பதிவு செய்தது. எந்த பெரிய வணிக சமரசங்களும் இல்லாமல், உண்மையை அப்படியே சொல்லும் சினிமாவாக இப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளை பெற்றது.

வெற்றிமாறனின் இயக்கத்தில், இயல்பான நடிப்பு, ஆவணப்படத் தன்மையிலான  காட்சியமைப்பு, மனதை உலுக்கும் கதை சொல்லல் ஆகியவை ‘விசாரணை’யை ஒரு சாதாரண திரைப்படத்தையும் தாண்டிய, ஒரு சமூக ஆவணமாக மாற்றின. தேசிய, சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் பெற்ற அங்கீகாரம், தமிழ் சினிமாவின் தரத்தை உலக அரங்கில் உயர்த்திய முக்கிய தருணங்களில் ஒன்றாக அமைந்தது.

‘விசாரணை’ போன்று துணிச்சலான, சமூக பொறுப்புள்ள படங்கள் தொடர்ந்து உருவாக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அந்த வகையில், 10 ஆண்டுகள் கடந்தும் ‘விசாரணை’ இன்னும் உயிருடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படமாகவே திகழ்கிறது.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget