Love Marriage: கல்யாணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்.. ரகளை செய்யும் விக்ரம் பிரபு.. லவ் மேரேஜ் டிரைலர் எப்படி இருக்கு?
விக்ரம் பிரபு, ரமேஷ் திலக் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் படத்தின் டிரைலர் வெளியாகி கலகலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இறுகப்பற்று, டாணாக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு நிதானமாக யோசித்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் பட நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கோடாங்கி வடிவேலு, கஜ ராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
90ஸ் கிட்ஸ் காதல்
பெரும் எதிர்பார்ப்போடு உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரலைரில் விக்ரம் பிரபு 30 வயது இளைஞராக நடித்திருக்கிறார். 90ஸ் கிட்ஸ் ஆக இருக்கும் விக்ரம் பிரபுவிற்கு பெண் தேடுவதுதான் பிரதான வேலையாக அவரது குடும்பத்தாருக்கு இருக்கிறது. ஒவ்வொரு பொண்ணும் சில காரணத்தை சொல்லி ரிஜக்ட் செய்கின்றனர். கோவை குசும்போடு உருவாகியுள்ள லவ் மேரேஜ் படத்தின் டிரைலர் கலகலப்பான சிரிப்பு வெடியுடன் முடிவடைகிறது. 90ஸ் கிட்ஸ் கடைசி வரைக்கும் பேச்சுலர் வாழ்க்கைதான் வாழணுமா என்ற ஏக்கமும் டிரைலரை பார்க்கும் உணர்வீர்கள்.
கல்யாணம் நடக்குமா?
லவ் மேரேஜ் டிரைலரில் விக்ரம் பிரபு செய்யும் குறும்புத்தனங்கள் பார்க்க ரசிக்கும்படி இருக்கின்றன. நடிகை சுஷ்மிதா பட்டை பெண் பார்க்க செல்லும் விக்ரம் பிரபு பார்த்ததும் பிடித்து போகிறது. அதேபோன்று சுஷ்மிதாவுக்கும் பிடித்திருக்கிறது. இவர்களுக்குள் எப்படி காதல் வந்தது, விக்ரம் பிரபுக்கு திருமணம் நடக்குமா என்பதே கதையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. ரமேஷ் திலக் அவ்வப்போது வரும் காட்சிகளில் ஜாதகம், சம்பிரதாயத்தை கலாய்த்து செல்லும் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கின்றன. அதே நேரத்தில் நடிகர் சத்யராஜ் இப்படத்தில் கேமியோ ரோல் செய்திருப்பதாக தெரிகிறது.
குடும்பங்கள் கொண்டாடும் படம்
30 வயதான இளைஞருக்கு ஒரு குடும்பமே ஊர் ஊராக பேருந்து பிடித்து பெண் பார்க்க காட்சிகள் ரகளையாக இருக்கிறது. அதே நேரத்தில் எனக்கு மட்டும் கல்யாணம் ஆனா பொம்பளை பிள்ளைங்களா பெத்துக்கணும் என சொல்லும் விக்ரம் பிரபுவை அவரது அப்பா கலாய்ப்பதும் பார்க்க ரசிக்கும் படியே டிரைலர் இருக்கிறது. குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி பட வரிசையில் லவ் மேரேஜ் திரைப்படமும் ஒரு பீல் குட் படமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் டிரைலரை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இப்படம் விக்ரம் பிரபுவிற்கு நல்ல வெற்றியை தரும் என்றும் கூறுகின்றனர். லவ் மேரேஜ் திரைப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Presenting the Trailer of Fun-Filled, Enjoyable Wholesome Family Entertainer #LoveMarriage 🤩❤️
— Assure Films (@AssureFilms) June 19, 2025
Watch Trailer 🔗 https://t.co/JXF9me1X9V
Grand release in Theatres Worldwide on JUNE 27th 🥳🥁
Directed by @Director_Priyan 🎬
A @RSeanRoldan musical 🎶 @iamVikramPrabhu… pic.twitter.com/MyliO1GJj0





















