ஆண்டவரே, நீ ஏத்தி பாடு… 200 கோடி கிளப்பில் இணைந்தது விக்ரம்! 500 கோடி டார்கெட்டாம்!
2022 ல் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்த விக்ரம் ரிலீசான 5 நாட்களில் உலக அளவில் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
படம் ரிலீஸான இரண்டே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் 5 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. இதனை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாட துவங்கி விட்டனர்.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா ஆகியோர் நடித்த விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் ஜுன் 3 ம் தேதி தியேட்டர்களில் 5 மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது.
விக்ரம்
விக்ரம் படம் கமல் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது. படம் முழுக்க கமலை மட்டுமே காட்டாமல், அனைத்து நடிகர்களுக்கும் லோகேஷ் கனகராஜ் முக்கியத்துவம் கொடுத்த விதம் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. கிளைமாக்ஸ் காட்சியில் 3 நிமிடங்கள் மட்டுமே வந்த ரோலக்ஸ் சார் தான் படத்தின் ஹைலைட். சூர்யா பணத்திற்காக அல்ல மாறாக கமல் மீதான அன்புக்காக மட்டும் அந்த காட்சியில் நடித்திருக்கிறார்.
பரிசு
அந்த அன்புக்கு நன்றி தெரிவிக்கும் படலத்தை விக்ரம் 3 படத்தில் துவங்குவதாக கமல் தெரிவித்துள்ளார். அவருக்கு ஒரு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சையும் பரிசாக அளித்து அன்பை பகிர்ந்துள்ளார். மேலும் விக்ரம் எனும் வெற்றிப் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு பாசமாக கடிதம் எழுதியதுடன், அவருக்கு விலை உயர்ந்த லெக்சஸ் காரை பரிசளித்துள்ளார் கமல். மேலும் விக்ரம் படத்தில் லோகேஷுக்கு உதவியாளராக வேலை செய்த 13 உதவி இயக்குநர்களுக்கு மோட்டார் பைக்கை பரிசாக அளித்து அசத்தியிருக்கிறார் கமல்.
கமல் மகிழ்ச்சி
கமல்ஹாசன் தமிழ் திரை உலகின் ஆகச்சிறந்த கலைஞன் என்றாலும் அவருடைய அனைத்து நல்ல படங்களுமே சில வருடங்கள் கழித்துதான் மக்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளன. ஆனால் இது சற்றே மாறுபட்டு உடனடி ரியாக்ஷன்களை கொடுத்துள்ளது. எல்லா தரப்பில் இருந்தும் படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வர கமல் படு குஷியாக இருக்கிறாராம்.
200 கோடி வசூல்
2022 ல் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்த விக்ரம் ரிலீசான 5 நாட்களில் உலக அளவில் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இது படத்திற்கு மிகப் பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதனால் மிக விரைவிலேயே உலக அளவில் 500 கோடி வசூல் கிளப்பில் விக்ரம் படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா வர்த்தகர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, விக்ரம் படம் உலக அளவில் 200 கோடி வசூலை கடந்து விட்டது.
எங்கெங்கு எவ்வளவு வசூல்
அமெரிக்காவில் மட்டும் 2 மில்லியன் டாலர் (15.5 கோடி) வசூல் செய்துள்ளது. ஐந்தாவது நாளான நேற்று, உலகம் முழுவதும் 22 முதல் 25 கோடியை விக்ரம் படம் வசூல் செய்துள்ளது. மொத்தமாக தற்போது வரை 215.65 முதல் 218.65 கோடிகளை விக்ரம் படம் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் 73.6 கோடி, ஆந்திராவில் 14.5 கோடி, கர்நாடகாவில் 13.3 கோடி, கேரளாவில் 17.77 கோடி, இந்தியில் 3 கோடி, வெளிநாடுகளில் 71.5 கோடிகள் வசூலை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 122.17 கோடிகளை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் தமிழகத்திலும் 100 கோடி வசூலை விக்ரம் படம் பெறும் என வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்